தனி ஒருவன் 2... ஜெயம் ரவிக்கு வில்லனாகும் மலையாள சூப்பர்ஸ்டார்?

தனி ஒருவன் 2ல் வில்லனாக நடிக்க மம்முட்டியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சென்னை: தனி ஒருவன் 2 படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்க மம்முட்டியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தனி ஒருவன். இப்படத்தில் நாயகன் கதாபாத்திரத்தைவிட அதிகம் பேசப்பட்டது வில்லன் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம். அப்படத்தில் வில்லனாக நடித்திருந்த அரவிந்த்சாமியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில், தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டுள்ளனர் மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.

நயன்தாரா:

நயன்தாரா:

முதல் பாகத்தைப் போலவே இந்தப் படத்திலும் ஜெயம் ரவி எஸ்.பியாக நடிக்க உள்ளார். தடயவியல் துறை நிபுணராக நயன்தாரா நடிக்கிறார். முதல் பாகத்தில் இருந்து வேறுபட்டு, இரண்டாம் பாகத்தில் இரண்டு நாயகிகள் உள்ளனர்.

மீண்டும் ஜெயம்ரவியுடன்:

மீண்டும் ஜெயம்ரவியுடன்:

அதன்படி, நயன்தாராவைத் தவிர்த்து மற்றொரு நாயகியாக சாயிஷா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே சாயிஷா, ஜெயம்ரவியுடன் வனமகன் படத்தில் நடித்திருந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.

மாஸ் வில்லன்:

மாஸ் வில்லன்:

முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் வில்லன் கதாபாத்திரம் பவர்புல்லாக உருவாக்கப்படுகிறதாம். தற்போது அரவிந்த்சாமி மற்ற படங்களில் பிசியாக இருப்பதால், மற்றொரு மாஸ் வில்லனை படக்குழுவினர் தேடி வருகின்றனர்.

பேச்சுவார்த்தை:

பேச்சுவார்த்தை:

அந்தவகையில், மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியை ஜெயம் ரவிக்கு வில்லனாக்க மோகன் ராஜா முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இது தொடர்பாக மம்முட்டியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

எதிர்பார்ப்பு:

எதிர்பார்ப்பு:

சமீபகாலமாக பாலிவுட் நடிகர்கள் தமிழில் வில்லனாக நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் மம்மூட்டியும் இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் ஏற்கனவே சில படங்களில் மம்மூட்டி நாயகனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X