தெலுங்கில் அகிலுக்கு வில்லனாகும் மம்முட்டி... ஏஜெண்ட் படத்தின் வில்லனாகிறார்

ஐதராபாத் : தெலுங்கில் ஏஜெண்ட் படத்தின் லீட் கேரக்டரில் ஒப்பந்தமாகியுள்ளார் அகில் அக்கினேனி.

சுரேந்தர் ரெட்டி இந்த படத்தை இயக்கவுள்ளார். படத்தில் ஸ்பை ஏஜெண்ட்டாக நடிக்கவுள்ளார் அகில்.

இந்நிலையில் அவருக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி.

ஏஜெண்ட் படம்

ஏஜெண்ட் படம்

தெலுங்கில் முக்கிய கதாநாயகனாக உருவெடுத்துள்ளார் அகில் அக்கினேனி. இவர் அடுத்ததாக ரேஸ் குர்ராம் இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ஏஜெண்ட் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். ஸ்பை ஏஜெண்ட்டாக இந்த படத்தில் அவர் நடிக்கிறார். பிரம்மாண்டமான வகையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட உள்ளது.

வில்லனாகும் மம்முட்டி

வில்லனாகும் மம்முட்டி

அமெரிக்க ஆக்ஷன் த்ரில்லரான தி ப்ரௌனி சீரீசின் தாக்கத்தில் அகிலின் கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 12ம் தேதி ஏஜெண்ட் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் வில்லனாகியுள்ளார் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி.

மூவர் கூட்டணி

மூவர் கூட்டணி

முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்க மோகன்லால் மற்றும் உபேந்திரா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர்களிடம் ஒப்புதல் கிடைக்காத நிலையில் தற்போது மம்முட்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். முதல்முறையாக மம்முட்டி, அகில் மற்றும் சுரேந்தர் ரெட்டி கூட்டணி இந்த படத்தின் மூலம் இணையவுள்ளது.

தமன் இசை

தமன் இசை

மம்முட்டி மற்றும் அகில் கூட்டணி சிறப்பான காம்பினேஷனாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே மம்முட்டியை இந்த படத்தில் நடிக்க அணுகியதாகவும் தெரிவித்துள்ளனர். படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X