கொச்சியில் புதிதாக பிரம்மாண்ட வீடு வாங்கிய மோகன்லால்.. மம்மூட்டி கொடுத்த சர்ப்ரைஸ் விசிட்!
கொச்சி: மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் வாங்கி புணரமைத்துள்ள பிரம்மாண்ட வீட்டிற்கு நடிகர் மம்மூட்டி விசிட் அடித்துள்ள புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
கேரள சினிமா உலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களாகவும் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாகவும் மோகன்லால் மற்றும் மம்மூட்டி கெத்துக் காட்டி வருகின்றனர்.
அதே நேரத்தில் இருவருக்கும் இடையே உள்ள நட்பும் கொஞ்சம் கூட குறையவில்லை என்பதை இளம் போட்டி நடிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நடிப்பு அரக்கர்கள்
தேசிய விருது போட்டியென்றாலும், பாக்ஸ் ஆபிஸ் போட்டியென்றாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை என போட்டிப் போட்டு நடித்து வரும் நடிப்பு அரக்கர்கள் தான் மோகன்லால் மற்றும் மம்மூட்டி. இருவரது மகன்களும் நடிக்க வந்த நிலையிலும், அவர்களின் படங்களுக்கும் மேலாக பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருவது இவர்களது படங்கள் தான்.

போட்டியும் நட்பும்
நடிகர்களுக்குள் போட்டி இருக்கலாம். ஆனால், பொறாமை மற்றும் வீண் சண்டை தான் இருக்கக் கூடாது. தமிழில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் எப்படி நட்பாக இருக்கின்றனரோ அதே போல மலையாளத்தில் மம்மூட்டி மற்றும் மோகன்லால் நட்பாக பழகி வருவது இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு பாடமாகவே அமைந்துள்ளது.

பிரம்மாண்ட டூப்ளெக்ஸ் வீடு
கொச்சியில் உள்ள குந்தனூரில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 15வது மற்றும் 16வது அடுக்கு மாடிகளை ஒட்டுமொத்தமாக வாங்கிய மோகன்லால், அந்த இரண்டையும் உள்ளே மாடி வரும் படி புணரமைத்து சமீபத்தில் கிரகப்பிரவேஷம் செய்து குடி புகுந்தார். அதன் வீடியோவை ஒன்று சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

மோகன்லால் வீட்டில் மம்மூட்டி
கிரகப்பிரவேஷத்துக்கு வர முடியாத நிலையில், மோகன்லாலின் அழைப்பை ஏற்று நடிகர் மம்மூட்டி நேற்று அவரது இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். மோகன்லால் மற்றும் அவரது மனைவி சுசித்ரா இருவரும் மம்மூட்டியை வரவேற்று வீட்டை சுற்றிக் காட்டினர். மோகன்லால் மற்றும் மம்மூட்டி எடுத்துக் கொண்ட புகைப்படம் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. மம்மூட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த போட்டோவை போட்டு லாலோட புதிய வீட்டில் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

குடும்பத்துடன்
டிசர்ட் அணிந்து செம ஸ்மார்ட்டாக மோகன்லால் அந்த புகைப்படத்தில் உள்ளார். சிகப்பு நிற ஸ்டிரைப் ஷர்ட் மற்றும் வேட்டி அணிந்து கொண்டு மம்மூட்டி படு மாஸாக போஸ் கொடுத்துள்ளார். குடும்ப உறவுகளுடன் அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படமும் சோஷியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Recommended Video

இருவரும் பிசி
70 வயதாகும் மம்மூட்டி மற்றும் 62 வயதான மோகன்லால் இருவருமே ஏகப்பட்ட படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். எம்புரான், ராம், த்ரிஷ்யம் 3, பாரோஸ் என மோகன்லால் கைவசம் 4 படத்துக்கும் மேல் உள்ளன. நண்பகல் நேரத்து மயக்கம், ரோர்ஷ்சா, கிறிஸ்டோபர், கடுகன்னவா ஒரு யாத்ரா மற்றும் பிலால் என 5 படங்களில் நடித்து வருகிறார் மம்மூட்டி.


Click it and Unblock the Notifications











