மஞ்சுமெல் பாய்ஸ் நடிகரை விரட்டி விட்ட மம்மூட்டி.. ஏன் தெரியுமா?.. யாரு இந்த செளபின் சாஹிர்?

திருவனந்தபுரம்: 200 கோடி கிளப்பில் இந்த வார இறுதியுடன் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள மஞ்சுமெல் பாய்ஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

குழிக்குள் விழுந்த தனது நண்பன் சுபாஷை குட்டன் கயிற்றைக் கட்டிக் கொண்டு இறங்கி காப்பாற்றும் காட்சி ரசிகர்களை தியேட்டரில் இருந்து வெளியே வரும் போது கண்கலங்க செய்து விடுகிறது.

Mammootty warned Manjummel Boys actor Soubin Shahir for this reason

கடவுள் யாரென்று பழநியில் இருக்கும் போது விவாதிக்கும் போது ஒளியுடன் வருவார் என சுபாஷ் கதாபாத்திரத்தில் நடித்த பாஸி சொல்வார். கிளைமேக்ஸ் காட்சியில் அவரை காப்பாற்ற ஒளியுடன் செளபின் சாஹிர் இறங்கும் காட்சிக்கு தியேட்டரில் அப்படியொரு கிளாப்ஸ் அள்ளும்.

யாரு இந்த செளபின் சாஹிர்: மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்த்த ரசிகர்கள் உடனடியாக கூகுளில் யார் இந்த செளபின் சாஹிர் என்று தான் தேடியிருப்பார்கள். ஸ்ரீநாத் பாஸியை தொடர்ந்து அந்த படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குட்டனாக நடித்த பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் தான். ஹீரோவுக்கான இலக்கணங்களை எல்லாம் மலையாள சினிமாவில் பலர் உடைத்துள்ளனர். வழுக்கைத் தலையுடன் பகத் ஃபாசில் இருந்தாலும் நடிப்பு ராட்சசன் என மிரட்டி வரும் நிலையில், செளபின் சாஹிரும் நடிப்பில் வில்லாதி வில்லன் தான். இயக்குநராக வேண்டும் என்கிற கனவுடன் சினிமாவில் பணியாற்றிய பிரபல உதவி இயக்குநர் பாபு சாஹிரின் மகன் தான் இந்த செளபின் சாஹிர்.

இயக்குநராக வேண்டி ஆசை: அப்பா பெரிய இயக்குநராக வேண்டும் என ஆசைப்பட்டு முடியாத நிலையில், சிறு வயதில் இருந்தே அப்பாவுடன் பல திரைப்பட சூட்டிங்கிற்கு சென்ற செளபின் சாஹிர் பகத் ஃபாசில் நடித்த கையேதும் தூரத் படத்தில் முகத்தை காட்டாமல் நடித்திருந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பும் கொடைக்கானலில் தான் நடைபெற்றது. அதன் பின்னர் உதவி இயக்குநராக நினைத்த செளபின் மம்மூட்டி நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த க்ரோனிக்கல் பேச்சுலர் படத்தின் சூட்டிங்கில் பணியாற்ற ஆரம்பித்தார்.

Mammootty warned Manjummel Boys actor Soubin Shahir for this reason

விரட்டி விட்ட மம்மூட்டி: 12ம் வகுப்பை முடித்து விட்டு கல்லூர்க்குச் செல்லும் வயதில் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த பொடிப்பையனை பார்த்த மம்மூட்டி செளபினை அழைத்துள்ளார். அவர் அருகே வந்ததும் யார் நீ? இங்கே என்ன பண்ற? எனக் கேட்க உதவி இயக்குநர் எனக் கூறியுள்ளார். என்ன படிக்கிற எனக் கேட்டதும் காலேஜ் படிக்கிறேன் என சொல்ல, முதலில் படிக்கிற வழியை பாரு என விரட்டி விட்டுள்ளார். மம்மூட்டியிடம் தனது மகனை அழைத்துக் கொண்டு பாபு வர, சினிமா கை விட்டாலும் படிப்பு கை விடாது. முதலில் படிக்கட்டும் பின்னர் சினிமா பக்கம் வரலாம் என அட்வைஸ் பண்ணாராம். ஆனால், செளபின் விடாப்பிடியாக இருந்ததை பார்த்த மம்மூட்டி உதவி இயக்குநராக பணியாற்றினாலும் டிகிரி முடிக்க வேண்டும் என உத்தரவு போட பார்ட் டைமாக படித்து டிகிரியையும் முடித்திருக்கிறார்.

மம்மூட்டிக்கு வில்லன்: இயக்குநராக ஆசைப்பட்ட செளபின் பரவ படத்தின் மூலம் இயக்குநரானார். அதன் பின்னர் நடிகராக மாறி விட்டார். மலையாளத்தில் வெளியான சுடானி ஃப்ரம் நைஜீரியா படத்தில் தான் இவர் முதன் முதலில் ஹீரோவாக நடித்தார். கும்பலாங்கி நைட்ஸ், வைரஸ், டிரான்ஸ், கோல்டு, ரோமஞ்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த செளபின் கடந்த 2022ம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான சிபிஐ 5 படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X