”என் மானத்த வாங்கிடாத, உனக்கு அது சரிவராது”: துல்கரை மம்முட்டி ஏன் இப்படி மிரட்டினாருன்னு தெரியுமா?

திருவனந்தபுரம்: துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள 'சீதா ராமம்' திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது 'சீதா ராமம்.'

இந்நிலையில் தான் நடிக்க வந்தது குறித்தும் அதற்கு மம்முட்டி ரியாக்ட் செய்தது பற்றியும் கூறியுள்ளார் துல்கர் சல்மான்.

காதல் மன்னன்

காதல் மன்னன்

கடந்த 10 ஆண்டுகளாக மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் துல்கர் சல்மான், மல்லுவுட்டின் முன்னணி நடிகராக அசத்தி வருகிறார். 'செகண்ட் ஷோ' படத்தில் அறிமுகமான அவருக்கு, அடுத்ததாக வெளியான 'உஸ்தாத் ஹோட்டல்' படம் நல்ல கம்பேக் கொடுத்தது. துல்கரும் நித்யா மேனனும் நடித்திருந்த இந்தப் படத்திற்கு மொழிகள் கடந்தும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

மாஸ் ஹீரோவாக கலக்கல்

மாஸ் ஹீரோவாக கலக்கல்

துல்கர் சல்மான் நடித்த பெரும்பாலான படங்கள், காதல் கதைகள் தான். அதனால் அவர் காதல் படங்களில் நச்சென்று ஸ்கோர் செய்தார். பெங்களூர் டேய்ஸ், 100 டேய்ஸ் ஆஃப் லவ், தமிழில் ஓகே கண்மணி, சார்லி போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றியடைந்தன. அதேபோல், கம்மட்டிப்பாடம் திரைப்படம், துல்கரின் நடிப்புத் திறமைக்கு சவாலாக அமைந்தது.

ரசிகர்களை வசீகரித்த சீதா ராமம்

ரசிகர்களை வசீகரித்த சீதா ராமம்

மலையாளம், தமிழ், தெலுங்கு என 3 மொழிகளிலும் தரமான படங்களில் நடித்து வந்த துல்கர் சல்மானுக்கு, ரசிகர்கள் பட்டாளமும் கூடிக் கொண்டே சென்றது. அவரது ஸ்டைலும், மேனரிசமும் ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. இந்நிலையில், அவரது நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான 'சீதா ராமம்' மாஸ் ஹிட் கொடுத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழி ரசிகர்களையும் வசீகரித்துள்ளது. ஹனு ராகவபுடி இயக்கியுள்ள இந்தப் படத்தில் துல்கருக்கு ஜோடியாக மிருணாள் தாகூரும், முதன்மையான கேரக்டரில் ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர்.

Recommended Video

Hey Sinamika | Brindha Gopal |Khushbu மிக பெரிய Support | Filmibeat Tamil
நடிக்க மறுப்பு தெரிவித்த மம்முட்டி

நடிக்க மறுப்பு தெரிவித்த மம்முட்டி

இந்நிலையில், நடிகரான அனுபவம் குறித்து பேசியுள்ள துல்கர், "நான் சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்ததும், அப்பாவுக்கு கோபம் வந்தது. அதற்கு முன்பு நான் அவரை அப்படி பார்த்தது இல்லை. நடிக்க வந்து என் மானத்தை வாங்கிடாதேன்னு சொன்னார். மேலும், நீ நடனம் ஆடியோ, நடித்தோ நான் பார்த்ததே இல்லை. நடிப்பு நீ நினைக்கிற மாதிரி சாதாரண விசயம் இல்லை. அதனால் இத்தோடு விட்டுவிடு என பயங்கரமாக திட்டினார். அதையும் மீறியே நான் நடிக்க ஆரம்பித்தேன்." எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X