Mammootty: மனுஷன் மிரட்டுறாரே.. மம்மூட்டியின் பேய் படம்.. பிரம்மயுகம் டீசர் எப்படி இருக்கு?
திருவனந்தபுரம்: மாசத்துக்கு ஒரு படம் என ரிலீஸ் செய்து விடுவார் போல மம்மூட்டி. மனுஷன் அந்தளவுக்கு செம ஸ்பீடாக உள்ளார். கடந்த நவம்பர் மாதம் தான் ஜோதிகா மற்றும் மம்மூட்டி நடித்த காதல் தி கோர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் ஓடிடியில் வெளியான அந்த படத்துக்கு பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது.
இந்நிலையில், அடுத்து பேய் படமாக உருவாகி உள்ள பிரம்மயுகம் படத்தின் டீசரை தற்போது வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட் கொடுத்திருக்கிறார் மம்மூட்டி.

கல்யாணத்துக்கு பிறகே 4 முறை தான்: ஜோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி, ஜோதிகா நடித்த காதல் தி கோர் படத்தில் மம்மூட்டி ஓரினச்சேர்க்கையாளராக நடித்திருப்பார். ஆனால், ஜோதிகாவை திருமணம் செய்து வயதுக்கு வந்த மகளும் இருக்கும். ஆனால், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடும் ஜோதிகா கோர்ட்டில் தங்களுக்குள் 4 முறை தான் உடலுறவு நடந்தது என்பார். மாதத்திற்கு 4 முறை என்பது பெரிய விஷயம் தானே என வழக்கறிஞர் சொல்ல, கல்யாணம் ஆனதில் இருந்து இத்தனை ஆண்டுகளிலேயே அத்தனை தடவை தான் என ஜோதிகா சொல்வது படம் சொல்ல வந்த ஆழமான அழுத்தமான கதையை அந்த ஒரு வசனத்திலேயே சொல்லி விடும்.
விக்ரம் வேதா தயாரிப்பு நிறுவனம்: பிரம்மயுகம் படத்தை விக்ரம் வேதா படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்கள் எல்லாம் பல நூறு கோடி சம்பளம் கேட்கும் நிலையில், கேரளாவில் மம்மூட்டியை வைத்தே படம் பண்ணிடலாம் என முடிவு செய்து விட்டார்ர்கள் போலத் தெரிகிறது.
பூதக்காலம் இயக்குநர்: இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் 2021ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி வெளியான பூதக்காலம் படத்தில் ரேவதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஹாரர் த்ரில்லர் படமாக வெளியான அந்த படத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. இந்நிலையில், அந்த இயக்குநர் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள மற்றொரு ஹாரர் த்ரில்லர் படமாக பிரம்மயுகம் உருவாகி உள்ளது.
மம்மூட்டி அந்த கடைசி ஷாட்டில் மிரட்டல்: மம்மூட்டி படத்தின் டீசர் என்றதும் ஆரம்பத்தில் இருந்தே மம்மூட்டியை தேடிய ரசிகர்களுக்கு யார் யாரோ ஒரு மர்ம குகையில் எதையோ தேடி சென்றுக் கொண்டிருக்கும் காட்சிகள் இடம்பெற கடைசியாகத்தான் மம்மூட்டியின் என்ட்ரி காட்டப்படுகிறது. அதிலும், கடைசியில் வாயால் வித்தியாசமாக விளக்கையே வில்லத்தனம் கலந்து ஊதி அணைக்கும் காட்சி பயமுறுத்துகிறது. விரைவில் இந்த படம் வெளியாகப் போவதாக அறிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











