Mammootty: மம்மூட்டி எடுத்த இந்திய புல்புல் பறவை புகைப்படம்.. அட இவ்வளவு விலைக்கு ஏலம் போயிருக்கா?
கொச்சி: நடிகர் மம்மூட்டி மலையாளத்தில் மிகப்பெரிய சூப்பர் ஹிட் ஹீரோவாக கடந்த பல ஆண்டுகளை கடந்து வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய மகன் துல்கர் சல்மானும் மிகப்பெரிய ஹீரோவாக மாறியுள்ள நிலையில் தொடர்ந்து ஹீரோவாகவே தன்னை நிலைநிறுத்தி வருகிறார் மம்மூட்டி.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான டர்போ படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. நடிகர் மம்மூட்டி நடிப்பில் மட்டுமில்லாமல் புகைப்படம் எடுப்பதிலும் சிறந்து விளங்குகிறார். தான் எடுத்த பல புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

நடிகர் மம்மூட்டி: நடிகர் மம்மூட்டி மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் அடுத்தடுத்து வெற்றிப்பட கூட்டணியுடன் இணைந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். மலையாளத்தில் இவரது நடிப்பில் வெளியான பிரம்மயுகம் படம் இவரது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியது. படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள டர்போ படமும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக சமந்தாவுடன் இணைந்து மம்மூட்டி தன்னுடைய சொந்த தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மம்மூட்டி -சமந்தா ஜோடி: இந்தப் படத்தை இயக்குநர் கவுதம் மேனன் இயக்கவுள்ளார். இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் மம்மூட்டி 70 வயதை கடந்த நிலையிலும் தன்னுடைய பிட்னஸை சிறப்பாக வைத்து வருகிறார். இந்நிலையில் நடிப்பில் மட்டுமில்லாமல் புகைப்படங்கள் எடுப்பதிலும் மம்மூட்டிக்கு ஆர்வம் அதிகம். இவர் தான் செல்லும் இடங்களில் எடுக்கும் சிறப்பான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

மம்மூட்டி எடுத்த புகைப்படம்: இந்நிலையில் மம்மூட்டி எடுத்த இந்தியன் புல்புல் பறவையின் புகைப்படம் ஒன்று மிக அதிக விலைக்கு அதாவது மூன்று லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. கொச்சியில் நடைபெற்ற கண்காட்சியில் மம்மூட்டியின் இந்த புகைப்படம் இடம்பெற்ற நிலையில் தொழிலதிபர் அச்சு உல்லட்டில் இந்த புகைப்படத்தை 3 லட்சும் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார். இந்த கண்காட்சியில் 23 புகைப்படக் கலைஞர்களின் 61 புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதில்தான் மம்மூட்டியின் புகைப்படம் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு ஏலம்: மேலும் இந்த புகைப்படம் கோழிக்கோட்டில் விரைவில் வரவுள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் மூலம் கிடைத்த பணத்தை கண்காட்சியை நடத்திய இந்துச்சூடன் அறக்கட்டளை சார்பில் கேரள பறவைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தப்படும் என்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











