Kalamkaval Collection: பெண்களை ஏமாற்றி கொல்லும் வில்லன்.. மம்மூட்டியின் களம்காவல்..12 நாள் வசூல்!
சென்னை: மம்மூட்டி நடிப்பில் கடந்த 5 ஆம் தேதி தியேட்டரில் களம்காவல் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் வெளியான நாளில் இருந்து மக்களிடம் இருந்து நல்ல விமர்சனத்தையும் வசூலையும் குவித்து வருகிறது. இப்படம் வெளியாகி 12 நாட்களாகி உள்ள நிலையில் படம் நல்ல வசூலை குவித்து வருகிறது.
அறிமுக இயக்குநர் ஜிதின் ஜோஸ் இயக்கியுள்ள களம்காவல் படத்தில் மம்மூட்டி,விநாயகன், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். பெண்களை காதல் வலையில் வீழ்த்தி கொலை செய்யும் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்துள்ளார்.

களம்காவல்: ஸ்டீபன் தாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மம்மூட்டி நாகர்கோவிலில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பெண்களை காதல் வலையில் விழவைத்து, ஆசை வார்த்தைகளை கூறி பெண்களை ஏமாற்றி கொலை செய்யும் ஒரு சைக்கோவான மம்முட்டி பல பெண்களை கொலை செய்கிறார். அந்த ஊரில் ஒரு சாதிய கலவரத்தை விசாரிக்க விநாயகன் செல்கிறார். அந்த சாதிக் கலவரத்திற்குக் காரணம் ஒரு பெண் என்பது தெரியவர விநாயகம் அந்த பெண்ணை தேடி செல்கிறார். ஆனால், அந்தப் பெண் காணாமல் போனது தெரியவருகிறது. அந்த பெண் மட்டுமில்லை அவரைப் போலப் பல பெண்கள் காணாமல் போனது விசாரணையில் தெரியவருகிறது.
படத்தின் மொத்தவசூல்: இதைத்தொடர்ந்து நடக்கும் விசாரணையில் காணாமல் போன பெண்களுக்கு என்ன ஆனது? அவர்கள் யார், எதற்காக, கடத்தப்பட்டார்கள் என்பதை ஒரு சுவாரசியமான த்ரில்லர் திரைப்படமாக இயக்குநர் கதையை நகர்த்தி உள்ளார். வழக்கம் போல இந்த திரைப்படத்திலும் மம்முட்டி மற்றும் விநாயகன் இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல வசூலை பெற்று வருகிறது. இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை 2.15கோடியை வசூலித்தது. அதே போல திங்கட்கிழமையான படத்தின் வசூல் பாதியாக குறைத்து 75 லட்சமாக இருந்தது. செவ்வாய் கிழமையான நேற்று படத்தின் வசூல் 65 லட்சத்தை வசூலித்து இருந்தது.படத்தின் மொத்த வசூல் 33.60 கோடியாக உள்ளது.
ரூ 75 கோடி வசூல்: 'களம்காவல்' படம் 12 நாட்களில் ரூ. 75 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. இந்த திரைப்படம் கேரளா தவிர்த்து மற்ற மாநிலங்களிலும் வசூலை அள்ளிக்குவித்து வருகிறது. களம்காவல் திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் 7வது அதிக வசூல் செய்த மலையாளத் திரை மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications