மம்மூட்டியுடன் இணைகிறார் நயன்தாரா..திருமணத்திற்குப் பிறகு இன்னும் வேகம் எடுக்கிறாரா?

சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டியின் புதிய படத்தில் நடிப்பதாகத் தகவல்.

திருமணத்திற்குப் பிறகு மம்மூட்டியின் புதிய படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாஸ்கர் தி ராஸ்கல், புதிய நியமம் படங்களைத் தொடர்ந்து மீண்டும் இணையும் சூப்பர் மெகா ஜோடி.

மலையாளத்தில் மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உன்னிகிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், மம்மூட்டி இப்படத்தில் போலீஸ் ஆபிஸராக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சோஷியல் திரில்லர்

சோஷியல் திரில்லர்

மம்மூட்டி சீனியர் போலீஸ் ஆபிஸராக நடிக்கும் இந்தப் படம், சோஷியல் திரில்லர் பின்னணியில் படுமிரட்டலாக உருவாகும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தோட கதையை பிரபல எழுத்தாளர் உதய் கிருஷ்ணா எழுதியுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. சமீபத்துல இந்தப் படம் டிராப் ஆனதாக ஒரு வதந்தி பரவிட்டு இருக்க, இப்போ அதுக்கெல்லாம் படக்குழு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது.

பரபரக்கும் மெகா ஸ்டார்

பரபரக்கும் மெகா ஸ்டார்

நண்பகல் நேரத்து மயக்கம், ரோஸ்ச்சார்ச் படங்கள்ல பிஸியா நடிச்சிட்டு வர்ற மம்மூட்டி, சீக்கிரமே உன்னிகிருஷ்ணன் டைரக்ட் பண்ணப் போற படத்துல நடிக்கப் போறதா சொல்லப்படுது. மம்மூட்டியோட கேரியர்ல ரொம்ப முக்கியமான படமா இது இருக்கும்ன்னும் படக்குழு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

மெகா ஸ்டாருடன் லேடி சூப்பர் ஸ்டார்

மெகா ஸ்டாருடன் லேடி சூப்பர் ஸ்டார்

முதலில் இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், கால்ஷீட் பிரச்சினையால் மஞ்சுவாரியர் நடிக்க முடியாமல் போனதாகவும், அவருக்குப் பதிலாக நயன்தாரா கமிட் ஆகியுள்ளதாகவும் தெரிகிறது. திருமணத்திற்குப் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் நயன்தாரா, கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லிஸ்ட் இன்னும் முடியல

லிஸ்ட் இன்னும் முடியல

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினா நடிச்சாலும், இன்னும் மூனு முக்கியமான நாயகிகள் ரவுண்டு கட்ட ரெடியாக உள்ளனர். ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சினேகா, அமலா பால் இவர்களும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் ஜினு ஜோசப், திலீஸ் போத்தன் உள்ளிட்ட சிலரும் முக்கியமான பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

அடுத்தடுத்து சூப்பர் அப்டேட்

அடுத்தடுத்து சூப்பர் அப்டேட்

இந்தப் படத்தில் மம்மூட்டியுடன் நயன்தாரா இணைந்து நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தின் தலைப்பு உட்பட அடுத்தடுத்து சூப்பர் அப்டேட்கள் ரசிகர்களுக்காக காத்துகிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X