Lal Salaam Moideen Bhai - மொய்தீன் பாய் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா?
சென்னை: Lal Salaam Moideen Bhai (லால் சலாம் மொய்தீன் பாய்) லால் சலாமில் மொய்தீன் பாய் கேரக்டரில் ரஜினிக்கு பதில் வேறு ஒரு நடிகர்தான் முதலில் நடிக்க வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது.
தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா இப்போது அவரை பிரிந்து தனியாக வாழ்ந்துவருகிறார். அவர் இயக்கிய 3 படம் கலவையான விமர்சனத்தை பெற்ற சூழலில் அடுத்து அவர் இயக்கிய வை ராஜா வை தோல்வி படமாக அமைந்தது. இப்படிப்பட்ட சூழலில் தனது மூன்றாவது லால் சலாம் என்ற படத்தை இயக்கிவருகிறார் ஐஸ்வர்யா. திருமண முறிவுக்கு பிறகு முடங்கிக்கிடக்காமல் தனது பணியில் தீவிர கவனம் செலுத்திவரும் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்

லால் சலாம்: லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் லால் சலாம் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் லீட் ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. அடுத்தக்கட்ட ஷூட்டிங் மும்பையில் தொடங்கியிருக்கிறது. இதில் படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது.
சிறப்புத் தோற்றத்தில் ரஜினி: லால் சலாமின் ஹைலைட்டே அதில் ரஜினி நடிப்பதுதான். ஜெயிலர் படத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யாவுக்காக சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார். இதுவரை லால் சலாமின் ஷூட்டிங்கில் பங்கேற்காத ரஜினிகாந்த் மும்பை ஷெட்யூலில் கலந்துகொள்ளவிருக்கிறார். அவருக்கான படப்பிடிப்பு பத்து நாள்கள் நடைபெறும் என்றும் படத்தில் 40லிருந்து 50 நிமிடங்கள் வரை திரையில் தோன்றுவார் என்றும் தெரிகிறது.
மொய்தீன் பாய் கேரக்டரில் ரஜினிகாந்த்: அதேபோல் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் கேரக்டரில் ரஜின்காந்த் நடித்திருக்கிறார். இந்தியாவில் இஸ்லாமியர் வெறுப்பை பரப்பும் விதமாக படங்கள் வருவது அதிகரித்திருக்கும் சூழலில் உச்ச நடிகரான ரஜினிகாந்த் இஸ்லாமியர் கெட் அப் போட்டிருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதுதொடர்பான போஸ்டர் சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

ட்ரோலான மொய்தீன்: பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான போஸ்டர் ரஜினியே எதிர்பார்க்காதபடி ட்ரோலை சந்தித்திருக்கிறது. தொப்பி வாப்பா பிரியாணி கெட் அப், இது ரஜினியே இல்லை அவரது முகத்தை மட்டும்தான் ஒட்ட வைத்திருக்கின்றனர் என ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். அதேபோல், தனது தந்தைக்கு ஒரு ஒழுங்கான போஸ்டரை வடிவமைப்பதில்லையா ஐஸ்வர்யா என கேள்வியும் எழுப்பிவருகின்றனர்.
மம்மூட்டி நடிக்க வேண்டியது: இந்நிலையில் மொய்தீன் பாய் கேரக்டரில் ரஜினிக்கு பதிலாக முதலில் மம்மூட்டிதான் நடிக்க வேண்டியதிருந்தது என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. மேலும், மம்மூட்டியிடம் அவர் கதை சொல்ல மம்மூட்டியும் ஓகே சொல்லிவிட்டாராம். அதன் பிறகு ரஜினியும் இந்தக் கதையை கேட்டபோது மொய்தீன் பாய் கேரக்டரில் இம்ப்ரெஸ் ஆகி தானே நடிக்கிறேன் என கூறி லால் சலாம் படத்துக்குள் வந்திருக்கிறார் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications