விஷாலின் 'எனிமி'யில் இணைந்த பிரபல ஹீரோயின்.. வில்லன் ஆர்யாவுக்கு இவர்தான் ஜோடியாமே?

By

சென்னை: பிரபல நடிகை நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் மீண்டும் நடிக்கிறார்.

தமிழில், விஷால் நடித்த சிவப்பதிகாரம், ரஜினி நடித்த குசேலன், மாதவன் நடித்த குரு என் ஆளு, அருண் விஜய்யின் தடையறத் தாக்க உட்பட சில படங்களில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ்.

மலையாள நடிகையான இவர், அங்கு தொடர்ந்து நடித்து வருகிறார். சில படங்களில் பாடலும் பாடியுள்ளார்.

டாடி மம்மி வீட்டில்

டாடி மம்மி வீட்டில்

தமிழில், வில்லு படத்தில் இடம்பெற்ற டாடி மம்மி வீட்டில் இல்லை என்பது உட்பட பல பாடல்களையும் பாடி இருக்கிறார். மியூசிக் வீடியோ ஒன்றில் நடிப்பதற்காக இவர், கடந்த வருடம் துபாய் சென்றிருந்த போதுதான் கொரோனா தீவிரம் அடைந்தது. இதனால், அங்கிருந்து அவசரமாகக் கொச்சி திரும்பினார்.

சிறப்பு விமானம்

சிறப்பு விமானம்

பின்னர் கொரோனா காலகட்டத்தில் இயக்கப்பட்ட சிறப்பு விமானம் மூலம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். கேன்சரால் பாதிக்கப்பட்ட மம்தா மோகன்தாஸ், அதற்காக அமெரிக்காவில்தான் சிகிச்சை பெற்று குணமானார். அமெரிக்காவில் தோழிகளுடன் ஜாலி ட்ரிப் சென்றிருந்த மம்தா, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவை வைரலாயின.

அந்தாதுன் ரீமேக்

அந்தாதுன் ரீமேக்

தற்போது மலையாளத்தில் அந்தாதுன் ரீமேக்கில் பிருத்விராஜுடன் நடிக்கும் மம்தா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வந்திருக்கிறார். இவர் கடைசியாக, தமிழில் அருண் விஜய் நடித்த தடையறத் தாக்க என்ற படத்தில் நடித்திருந்தார். இதை மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் தமிழில் நடிக்கவில்லை.

ஆர்யா ஜோடியாக

ஆர்யா ஜோடியாக


இந்நிலையில், இப்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். விஷால் நடிக்கும் எனிமி படத்தில் இவர் இணைந்துள்ளார். ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தில் வில்லன் ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இன்னொரு ஹீரோயினாக மிருணாளினி ரவி நடிக்கிறார்.

ஊமை விழிகள்

ஊமை விழிகள்

பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். மினி ஸ்டூடியோ சார்பில் வினோத்குமார் தயாரிக்கிறார். இந்தப் படக்குழு, வரும் 10 ஆம் தேதி துபாய் செல்கிறது. அங்கு 15 ஆம் தேதி முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறது. பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் ஊமை விழிகள் படத்திலும் மம்த மோகன்தாஸ் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X