போதைப் பொருள் கடத்தல்: எஸ்.ஏ.சி.யின் 'நண்பர்கள்' பட ஹீரோயின், கணவர் கைது

By Siva

மும்பை: முன்னாள் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி மற்றும் அவரது கணவர் விஜய் கோஸ்வாமி போதைப் பொருள் கடத்தியதாக கென்யாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி. அவர் இந்தி தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் எழுதி, இயக்கி 1991ம் ஆண்டில் வெளிவந்த நண்பர்கள் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் மம்தா. 2002ம் ஆண்டில் இருந்து அவர் படங்களில் நடிக்கவில்லை.

Mamta Kulkarni, husband Vijay Goswami detained in Kenya

மம்தா தனது காதலரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னனுமான விஜய் 'விக்கி' கோஸ்வாமியுடன் துபாயில் குடியேறினார். 1997ம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் துபாயில் கைதான விக்கிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரது நன்னடத்தையின் காரணமாக அவரது தண்டனை காலம் 15 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

விக்கி சிறையில் இருக்கையில் இஸ்லாத்திற்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகின. மம்தா குல்கர்னியும் இஸ்லாத்திற்கு மாறி விக்கியை திருமணம் செய்து கொண்டு கென்யாவில் செட்டில் ஆனார். இந்நிலையில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மம்தா மற்றும் விக்கி கென்யாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Read more about: arrest கைது
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X