அப்போ புற்றுநோய் இப்போ புது நோய்.. நடிகைக்கு வந்த அடுத்த சோதனை

சென்னை: நடிகை மம்தான் மோகன் தாஸ் ஏற்கனவே புற்றுநோயை சந்தித்த சூழலில் தற்போது புதிய நோய் அவரை தாக்கியுள்ளது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரு.பழனியப்பன் இயக்கத்தில் விஷால், ரகுவரன் உள்ளிட்டோர் நடித்திருந்த படம் சிவப்பதிர்காரம். இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மம்தா மோகன் தாஸ். அந்தப் படத்துக்கு குரு என் ஆளு, தடையற தாக்க உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் எனிமி படத்தில் நடித்தார்.

கேரியர் உச்சத்தில் புற்றுநோய்

கேரியர் உச்சத்தில் புற்றுநோய்

மம்தா மோகன் தாஸ் தனது அழகு மட்டுமின்றி நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தவர். அவர் நடித்த படங்களில் தனது நடிப்பின் மூலம் தன்னைப்பற்றி பேசவைத்துவிடுவார். இதனால் தமிழ் சினிமாவில் பெரும் ரவுண்டு வருவார் என ரசிகர்கள் கணித்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. இதனால் சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கும் சூழல் அவருக்கு ஏற்பட்டது.

தைரியத்தை நம்பினேன்

தைரியத்தை நம்பினேன்

இந்நிலையில் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டபோது அதை எதிர்கொண்ட விதத்தையும், அதிலிருந்து மீண்டது குறித்து பேட்டி ஒன்றில் மம்தா மோகன் தாஸ் கூறியிருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் அதுகுறித்து பேசிய அவர், " எனக்கு புற்றுநோய் வந்தபோது என் தைரியத்தை நம்பினேன். நீங்கள் வலிமையானவர் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் இம்முறை அது நடக்கவில்லை. நான் தனியாக இருந்தேன். நண்பர்கள் அழைக்கப்படவில்லை. நான் தனியாக உட்கார்ந்து பல நாட்கள் அழுதேன்

மாத கணக்கில் தனியாக இருந்தேன்

மாத கணக்கில் தனியாக இருந்தேன்

எப்போதும் கேமரா முன் இருக்கும் நான் அப்படி இருட்டில் தனிமையில் இருப்பது அரிதான விஷயம். மாதக்கணக்கில் தனியாக இருந்தேன். ஆனால் அப்படி இருப்பது என்னைக் கொன்றுவிடும் என்பதை அறிந்தேன். இரவு இரட்டு அறையில் அமர்ந்து அழுதேன். அதனால்தான் என் பிரச்னையை வெளிப்படுத்தினேன். பின்னர் நடிகர் சங்கம் அமைதியாக இருந்தது. எனக்கு என்ன ஆயிற்று என்று யாராவது கேட்டால், எனது இன்ஸ்டாகிராமைப் பார்க்கச் சொல்கிறேன்.

வாழ்க்கையில் இன்னும் சோதனை முடியவில்லை

வாழ்க்கையில் இன்னும் சோதனை முடியவில்லை

எனது வாழ்க்கையில் சோதனைகள் இன்னும் முடிவடையவில்லை. தற்போது இன்னொரு புதிய பிரச்னையுடன் போராடிவருகிறேன். தற்போது, ​​எனக்கு ஆட்டோ இம்யூன் நோய் இருக்கிறது. ​​என் உடலில் வெள்ளை புள்ளிகளை கவனித்தேன். அதன் பிறகு அந்த நோய் முகம், கழுத்து மற்றும் உள்ளங்கைகளுக்கு பரவியது. மாத்திரை சாப்பிட்ட பிறகும், நுரையீரல் பிரச்னையால், மாத்திரைகளை குறைத்தேன். இதனால் உடல் முழுவதும் தழும்புகள் அதிகரித்துள்ளன" என்றார்.

Read more about: mamta mohandas
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X