Rajinikanth And Nayanthara - நயன்தாராவின் உத்தரவை மீற முடியாமல் தவித்தாரா ரஜினிகாந்த்?

சென்னை: Rajinikanth And Nayanthara (ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா) நடிகை மம்தா மோகன்தாஸ் கூறியிருக்கும் ஒரு விஷயம் நயன்தாராவின் உத்தரவை மீற முடியாமல் ரஜினிகாந்த் தவித்தாரா என்ற கேள்வியை ரசிகர்களிடையே எழுப்பியிருக்கிறது.

நடிகை மம்தா மோகன்தாஸ் விஷாலுடன் சிவப்பதிகாரம் என்ற படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து தமிழில் குரு என் ஆளு, தடையறத் தாக்க, எனிமி போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மம்தா மோகன்தாஸ், சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு மலையாளத்திலேயே கூடுதல் கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.

Mamta Mohandas opens up about rajinikanth and nayanthara at kuselan movie

புற்றுநோய் பாதிப்பு: மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தபோது புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளானார் மம்தா மோகன்தாஸ். தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று நோய் பாதிப்பிலிருந்து மீண்டார். தன்னுடைய நண்பர்களிடம் இந்த விஷயத்தை கூறியபோது அவர்கள் கொடுத்த நம்பிக்கை தனக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்ததாகவும் ஆனால் இருட்டு அறையில் அமர்ந்து இதுகுறித்து யோசித்து பலமுறை அழுதிருப்பதாகவும் முன்னதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

மம்தாவின் ஆதங்கம்: இதற்கிடையே ஒரு பேட்டியில் பேசிய அவர், தமிழில் ரஜினி நடித்த குசேலன் படத்தில் அவருடன் சில காட்சிகளிலும் ஒரு டூயட் பாடலிலும் தான் நடித்திருந்ததாகவும் ஆனால் தன்னுடைய காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் மம்தா மோகன்தாஸ் கூறியிருந்தார்.

மேலும் பேசிய அவர்,இதற்கு காரணம் அந்தப் படத்தில் நடித்த மற்றொரு நடிகை படத்தில் இன்னொரு நாயகி எதற்கு என்று அவர் கூறிவிட்டதால், தன்னுடைய காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

நயன்தாராதான் காரணமா?: குசேலன் படத்தில் நயன்தாராவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே மம்தா மோகன்தாஸின் காட்சிகள் நயன்தாராவின் வலியுறுத்தலால்தான் தூக்கப்பட்டுவிட்டது என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்தச் சூழலில் குசேலன் படத்தில் நடிக்க வந்ததற்கு நன்றி என ரஜினிகாந்த் தனக்கு ஃபோன் பண்ணி பேசினார். அவரால் அப்போது அதுமட்டும்தான் செய்ய முடிந்தது எனவும் மம்தா கூறியிருந்தார்

Mamta Mohandas opens up about rajinikanth and nayanthara at kuselan movie

நயன்தாரா உத்தரவை ரஜினியால் மீற முடியவில்லையா?: மம்தா மோகன்தாஸின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நினைத்திருந்தால் பி.வாசுவிடம் பேசி மம்தாவின் காட்சிகளை நீக்காமல் செய்திருக்கலாம்.

ஆனால் அவரோ மம்தாவுக்கு ஃபோன் செய்து நன்றி சொன்னதோடு நிறுத்திக்கொண்டார். எனில் குசேலன் படத்தில் நயன்தாராவின் கை அவ்வளவு ஓங்கியிருந்ததா என கேள்வி எழுப்பும் சிலர், நயனின் உத்தரவை மீற முடியாமல்தான் ரஜினிகாந்த் அவ்வாறு செய்தாரா எனவும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X