11.11.11ல் நிச்சயதார்த்தம், 12.12.12.ல் விவாகரத்தை அறிவித்தார் மம்தா மோகன்தாஸ்

By Siva

திருவனந்தபுரம்: திருமணமான ஓராண்டுக்குள் கணவனை விவாகரத்து செய்கிறார் நடிகை மம்தா மோகன்தாஸ்.

குரு என் ஆளு, சிவப்பதிகாரம் மற்றும் தடையறத் தாக்க ஆகிய படங்களில் நடித்தவர் மமதா மோகன்தாஸ். பாடகியும் கூட. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்த அவருக்கும், அவரது சிறு வயது நண்பரும், தொழில் அதிபருமான பிரஜித் பத்மநாபனுக்கும் 11-11-11 அன்று நிச்சயதார்த்தம் நடந்து 28.12.11 அன்று திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகும் நடித்து வரும் அவர் தனது கணவரிடம் இருந்து விவகாரத்து பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நானும், என் கணவரும் பிரிவது என்று முடிவு செய்துள்ளோம். இனியும் எங்களால் ஒன்றாக இருக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளோம். நான் நடிப்பு மற்றும் பாட்டில் கவனம் செலுத்துவேன் என்றார்.

மமதா மலையாளத்தில் மோகன்லால், பிரித்விராஜ் மற்றும் இந்திரஜித்துடன் நடித்து வருவதுடன் இசை ஆல்பம் ஒன்றிலும் பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X