Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஊமை விழிகள்... 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கும் மம்தா!
Recommended Video
ஊமை விழிகள்... தமிழ் சினிமாவில் மறக்க முடியாத த்ரில்லர் படம் இது. எண்பதுகளில் வெளியான இந்தப் படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். முழுக்க முழுக்க பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்களால் உருவாக்கப்பட்ட படம் இது.
இப்போது இதே தலைப்பில் மீண்டும் தமிழில் படம் எடுக்கிறார்கள். ஆனால் இந்தப் படம் ஊமை விழிகளின் ரீமேக்கோ தொடர்ச்சியோ அல்ல. புதிய படம். இந்தப் படத்தில் பிரபு தேவா நடிக்கிறார்.
ஆகாஷ் சாம் என்பவர் இயக்கும் இந்தப் படத்துக்கு விஷ்ணு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடி மம்தா மோகன்தாஸ். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். இதுகுறித்து மம்தா மோகன்தாஸ் கூறுகையில், "7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். இளம் இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் டான்ஸ் குரு பிரபுதேவாவுடன் இணைவது மகிழ்ச்சி," என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபு தேவா நடித்துள்ள மெர்க்குரி படம் வரும் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகிறது.