»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

ஆபாசமாக நடித்தது தொடர்பாக இந்தி நடிகை மம்தா குல்கர்னி மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு கைதுவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நண்பர்கள் என்ற தமிழ் படம் மற்றும் பல இந்திப்படங்களில் நடித்தவர் மம்தா குல்கர்னி. ஸ்டார் டஸ்ட் ஆங்கிலப்பத்திரிக்கையில் கடந்த 1994 ம் ஆண்டு இவரது ஆபாசப்படம் வெளியாகி இருந்தது. இதையொட்டி போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நடிகை மம்தா குல்கர்னி, பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் போட்டோகிராபர் உள்பட 4 பேர் மீது வழக்குத்தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு புதன்கிழமை நடந்தபோது நடிகை மம்தா குல்கர்னி கோர்ட்டில் ஆஜராகவில்லை. அதற்கானகாரணத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. எனவே நடிகை மம்தா குல்கர்னியை கைது செய்து கோர்ட்டில்ஆஜர்படுத்தும்படி கைது வாரன்ட் பிறப்பித்து மும்பை கூடுதல் தலைமை பெருநகர நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Read more about: arrest, mamtha kulkarni, warrent

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil