1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: படுக்கைக்கு அழைத்த நபர், நெத்தியடி கொடுத்த நடிகை
Recommended Video

திருவனந்தபுரம்: ஒரு மணிநேரத்திற்கு படுக்கைக்கு அழைத்த நபருக்கு நடிகை காயத்ரி நெத்தியடி பதில் அளித்துள்ளார்.
பரஸ்பரம் மலைாள தொலைக்காட்சி தொடரில் தீப்தி ஐபிஎஸ்-ஆக நடித்து பிரபலம் ஆனவர் காயத்ரி அருண். டிவி தொடர்களில் நடித்து வரும் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் காயத்ரியிடம் வாலாட்டியுள்ளார்.

காயத்ரி
ரூ. 2 லட்சம் தருகிறேன், ஒரு இரவு மட்டும் என்னுடன் வர முடியுமா?. இது நமக்குள் இருக்கும். ஒரு மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம் தருகிறேன் என்று ரோஹன் குரியகோஸ் என்பவர் காயத்ரிக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
ஃபேஸ்புக்
ரோஹன் அனுப்பிய மெசேஜை ஸ்கிரீன்ஷாட் எடுத்த காயத்ரி அதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு கூறியிருப்பதாவது, மிஸ்டர் ரோஹன் குரியகோஸ்..உங்களின் தாய்/சகோதரியின் பாதுகாப்புக்காக நான் நிச்சயம் பிரார்த்தனை செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

விளாசல்
காயத்ரியின் ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டியுள்ளனர். மேலும் ரோஹனை விளாசியுள்ளனர். ரோஹன் குறித்து உடனே போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஒரு இரவு
முன்னதாக மலையாள நடிகை நேஹா சக்சேனாவை ஒரு இரவுக்கு வர முடியுமா என்று துபாயில் வசிக்கும் நபர் ஒருவர் கேட்டார். அந்த நபர் குறித்து நேஹா தனது ஃபேஸ்புக் பகத்தில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











