கதையை சொல்வியா?: தியேட்டர் வாசலில் வாலிபரை அடித்து நொறுக்கிய அவெஞ்சர்ஸ் ரசிகர்கள்
Recommended Video
ஹாங்காங்: சீனாவில் அவெஞ்சர்ஸ் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து கதை சொன்ன நபரை தியேட்டரில் வரிசையில் நின்ற மக்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.
அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் ஓடும் தியேட்டர்கள் எல்லாம் ஹவுஸ்ஃபுல்லாக உள்ளது. இந்நிலையில் ஒருவர் ஹாங்காங்கின் காஸ்வே பேயில் உள்ள தியேட்டரில் அவெஞ்சர்ஸ் படம் பார்த்துள்ளார்.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அவர் கிளைமாக்ஸ் காட்சி என்ன என்பதை சத்தமாக கூறியுள்ளார். படம் பார்க்கும் ஆவலில் தியேட்டரில் வரிசையில் நின்றவர்கள் அந்த நபர் சத்தமாக கதையை சொன்னதை கேட்டு ஆத்திரம் அடைந்தனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் சேர்ந்து அவரை அடித்து நொறுக்கியுள்ளனர். அவருக்கு ரத்தம் வரும் வரை அடித்துள்ளனர். தியேட்டர் வாசலில் ஒருவர் காயங்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் சீன ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அவெஞ்சர்ஸ் படம் பார்ப்பவர்கள் தயவு செய்து கதையை தெரிவிக்க வேண்டாம் என்று மார்வெல் ஸ்டுடியோஸ், இயக்குநர்கள் மற்றும் ராபர்ட் டவ்னி ஜூனியர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில் கதையை தெரிவித்த நபருக்கு அடி விழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications