ஆந்திரா தியேட்டரில் அவெஞ்சர்ஸ் படம் பார்த்த கட்டிடத் தொழிலாளி மரணம்

By Siva

Recommended Video

அவென்ஜர்ஸ் வசூல் , மீம்ஸ், அவென்ஜர்ஸ் பார்த்த ஆந்திராவை சேர்ந்தவர் இறப்பு!- வீடியோ

கடப்பா: ஆந்திராவில் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படம் பார்த்துக் கொண்டிருந்த நபர் மரணம் அடைந்தார்.

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் ஹாலிவுட் படம் கோடை விடுமுறையில் வெளியாகியுள்ளது. படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

ரிலீஸான ஐந்தே நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 173. 28 கோடி வசூல் செய்துள்ளது.

தியேட்டர்

தியேட்டர்

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ப்ரொடத்தூரில் இருக்கும் சினிஹப் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் பெத்துபசுபுலா பாஷா(43) என்பவர் அவெஞ்சர்ஸ் படம் பார்த்துள்ளார். மே தினத்தை கொண்டாட அவர் தியேட்டருக்கு சென்றுள்ளார்.

கட்டிடத் தொழிலாளி

கட்டிடத் தொழிலாளி

கட்டிடத் தொழிலாளியான பாஷா 3டியில் படத்தை பார்த்துள்ளார். படம் முடிந்த பிறகும் அவர் கண்ணாடியை கழற்றாமல் இருக்கையிலேயே சிலை போன்று இருந்துள்ளார். கண்ணாடியை கழற்றியபோது தான் அவர் கண்களை திறந்தபடி இறந்தது தெரிய வந்தது.

பாஷா

பாஷா

பாஷா பற்றி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

விசாரணை

பாஷா படம் பார்த்துக் கொண்டிருந்தபோது மராடைப்பால் மரணம் அடைந்திருக்கக்கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X