ஃபேஸ்புக்கில் பெண் பெயரில் போலி கணக்கு வைத்து நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியவர் கைது
போபால்: நடிகைக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 30 வயது பெண் போஜ்புரி படங்களில் நடித்து வருகிறார். ரவி ஜோஷி(35) என்பவர் ராதிகா ஜெயின் என்று பெண் பெயரில் ஃபேஸ்புக்கில் போலி கணக்கு வைத்துள்ளார்.

அந்த போலி கணக்கு மூலம் நடிகைக்கு ஃபிரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்துள்ளார். நடிகையோ அவரின் ரெக்வெஸ்ட்டை ஏற்கவில்லை. இதையத்து ஜோஷி அந்த நடிகைக்கு அசிங்கம் அசிங்கமாக மெசேஜ் அனுப்பியுள்ளார்.
ஒரு கட்டத்திற்கு பிறகு பொறுமையை இழந்த நடிகை போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி ஜோஷியை கைது செய்துள்ளனர்.
நடிகை யார் என்ற விபரத்தை வெளியிட மறுத்த போலீசார் இந்தூரை சேர்ந்த அவர் பட விஷயமாக அடிக்கடி மும்பைக்கு சென்று வருவார் என்று மட்டும் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











