பறந்து வந்து சூப்பர் ஸ்டாரை எட்டி உதைத்த வாலிபர்: அதிர்ச்சி வீடியோ

By Siva

ஜொஹன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் வாலிபர் ஒருவர் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்நெக்கரை பறந்து வந்து உதைத்துள்ளார்.

71 வயதாகும் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்நெக்கர் தென்னாப்பிரிக்காவின் ஜொஹன்னஸ்பர்க் நகரில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ரசிகர்கள் மத்தியில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் பறந்து வந்து அர்னால்டை எட்டி உதைத்தார்.

அர்னால்டு

வாலிபர் உதைத்ததில் நிலைகுலைந்தபோதிலும் அர்னால்டு கீழே விழாமல் சுதாரித்து நின்றுவிட்டார். அர்னால்டை எட்டி உதைத்து கீழே விழுந்த நபரை பாதுகாவலர்கள் பிடித்தனர்.

மன்னிப்பு

அர்னால்டை ஒருவர் எட்டி உதைத்ததற்கு தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ரசிகர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். தங்கள் நாட்டுக்கு வந்த இடத்தில் இப்படி நடந்ததை நினைத்து அவர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

அக்கறை

உங்களின் அக்கறைக்கு நன்றி. கவலைப்படும்படி எதுவும் நடக்கவில்லை. என்னை ஒருவர் எட்டி உதைத்ததை உங்களை போன்றே இந்த வீடியோவை பார்த்து தான் நானும் தெரிந்து கொண்டேன். நல்ல வேளை அந்த முட்டாள் என் ஸ்நாப்சாட்டுக்கு இடையூறு செய்யவில்லை என்று அர்னால்டு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வேண்டுகோள்

அந்த நபர் என்னை உதைத்த வீடியோவை பகிர்வதற்கு பதில் இது போன்ற திறமைசாலிகளின் வீடியோவை பகிருங்கள் என்று அர்னால்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X