கிரில்ஸுடன் காட்டில் ரஜினிகாந்த்.. டிவிட்டரில் ட்ரென்டாகும் மேன் வெர்சஸ் வைல்டு! #ManvsWild
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பேர் கிரில்ஸுடன் டிஸ்கவரி சேனலுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிலையில் மேன் வெர்சஸ் வைல்டு என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். பேர் கிரில்ஸ் இயக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று மைசூர் சென்றார் ரஜினிகாந்த்.
மைசூர் அருகே உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் இந்த நிகழ்ச்சிக்கான ஷுட்டிங் நடைபெறுகிறது. இதன் ஷுட்டிங் இன்று தொடங்கியுள்ளது.

ஒபாமா மோடி
இதுதொடர்பான சில வீடியோக்களும் வெளியானது. இந்த நிகழ்ச்சிக்கான ஷுட்டிங் நாளை பிற்பகலுடன் நிறைவடையும் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா பங்கேற்றுள்ளார். இதேபோல் இந்திய பிரதமர் மோடியும் கிரில்ஸுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அரசியல் பிரவேசம்
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்துள்ள நிலையில் தனது அரசியல் பிரவேசத்தை தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஹேஷ்டேக்குகள்
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதாக வெளியான தகவலை தொடர்ந்து டிவிட்டரில் #ManvsWild, #BearGrylls ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றன.
இனம் இனத்தோடு
மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்பதை ரஜினி ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அதேநேரத்தில் சிலர் விமர்சித்தும் வருகின்றனர். மோடியை தொடர்ந்து ‘#ManvsWild' நிகழ்ச்சியில் ரஜினி.. கர்நாடகா காட்டில் படப்பிடிப்பு.. #பார்த்துக்கோங்க மக்களே இனம் இனத்தோட தான் சேரும்..சேர்ந்துள்ளது என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். இந்த ரசிகர், இன்றைய இந்தியபிரதமர் மோடி யை தொடர்ந்து. MAN VS WILD நிகழ்ச்சியில் நாளைய தமிழக முதல்வர் ரஜினிகாந்த் அவர்கள் கலந்து கொண்டார் என பதிவிட்டுள்ளார்.
பதட்டம் அதிகரிப்பு
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா , இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் கலந்து கொள்ளும் Man vs Wild.. தமிழக அரசியல் கட்சிகளை ஒருவித பதட்டத்திலேயே வைத்திருக்கிறார் ரஜினி. பதட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்பது உண்மை என்று கூறியிருக்கிறார் இந்த நெடிசன்.
கலங்கி நிற்காதே
"காட்டு வழிப்போற கிரில்ஸே கவலைப்படாதே..
காட்டுப்புலி வழிமறிக்கும் கலங்கி நிற்காதே...
#தலைவர் பேர சொன்னா புலி ஒதுங்கும் பாரு
எங்க தலைவர் பேர சொன்னா புலி ஒதுங்கும் பாரு.." !
(புலி விஜய் படம்னு யாரும் கிளம்பிடாதீங்கப்பா) என்று பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











