»   »  மாட்டிக் கொண்ட மானஷாஅம்மான்னா சும்மா இல்லடா என்றொரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.தமிழகத்தில் ஆளும் தரப்பை தூக்கி விடும் வசனங்கள், காட்சிகளுடன் உருவாக்கப்பட்டு வரும்இந்தப் படத்தில் மானஷா என்றொரு மெழுகு மொம்மை அறிமுகமாகிறார்.படத்தைத் தயாரிப்பது அம்மா கலைக்கூடம் (அட!

மாட்டிக் கொண்ட மானஷாஅம்மான்னா சும்மா இல்லடா என்றொரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.தமிழகத்தில் ஆளும் தரப்பை தூக்கி விடும் வசனங்கள், காட்சிகளுடன் உருவாக்கப்பட்டு வரும்இந்தப் படத்தில் மானஷா என்றொரு மெழுகு மொம்மை அறிமுகமாகிறார்.படத்தைத் தயாரிப்பது அம்மா கலைக்கூடம் (அட!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அம்மான்னா சும்மா இல்லடா என்றொரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் ஆளும் தரப்பை தூக்கி விடும் வசனங்கள், காட்சிகளுடன் உருவாக்கப்பட்டு வரும்இந்தப் படத்தில் மானஷா என்றொரு மெழுகு மொம்மை அறிமுகமாகிறார்.

படத்தைத் தயாரிப்பது அம்மா கலைக்கூடம் (அட!) என்ற நிறுவனம்.

அம்மா பட்டி (அடடே!) என்று ஒரு கிராமம் எப்படி நாட்டுக்கே வழிகாட்டுகிறது என்பது தான்கதையாம்.

சேவை மனப்பான்மையுள்ள ஒரு பெண்ணையும், மக்களையும் வதைக்கும் ஒரு பண்ணையாரை(யாருன்னு தெரியுதா!) ஊரே சேர்ந்து ஒழித்துக் கட்டுவது தான் இந்தப் படம்.

முழுக்கவும் இரு முக்கிய திராவிடக் கட்சிகளின் கசமுசாவை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டுவரும் இந்தப் படத்தில் கூடவே நகைச்சுவையும், காதலும் உண்டாம். இதில் கதாநாயகனாகநடிப்பவர் பாண்டியராஜன்.

இவருக்கு ஜோடியாகத் தான் மானஷா நடிக்கப் போகிறார் (எல்லாம் நேரம்!).

ராதாரவி, பொன்னம்பலம், குண்டு கல்யாணம், காஜா ஷெரீப், வடிவுக்கரசு, காந்திமதி, தேனிகுஞ்சாரம்மா என ஊரே நடிக்கிறது.

படத்தின் திரைக்கதையை எழுதி கூடவே முக்கிய கேரக்டரில் தலை காட்டப் போகிறார்ஜெயகோவிந்தன் (இதிலும் ஜெய!) என்பவர்.

அம்மான்னா சும்மா இல்ல எதிரிகளே.. பம்மாத்து பண்ணாதீங்க உதிரிகளே என்று ஒரு வி.டி.ஆர்(அதாங்க விஜய டி. ராஜேந்தர்) ஸ்டைல் அடுக்கு மொழிப் பாடலும் படத்தில் வருகிறது.

அத்தோடு வெப்சைட்டில் நீ தோன்றி இம்சை செய்யாதே என்று ஒரு மாடர்ன் சாங்கும் இருக்கிறது.

இப்படி பழமை மற்றும் புதுமையின் கலவையாக உருவாகும் இந்தப் படத்தை இயக்குவது ரவிராஜா.

படத்தின் அரசியல் சாயம் குறித்து ஏதும் தெரியாமல், தமிழ் படத்தில் ஹீரோயின் சான்ஸ் என்றுவந்து இந்தப் படத்தில் மாட்டியிருப்பவர் தான் மானஷா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil