ரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாரா 'மகள்'?
சென்னை: ரஜினியின் தர்பார் படத்தில் குழந்தை நட்சத்திரம் மானஸ்வி நடிப்பதாக கூறப்படுகிறது.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் தர்பார் படத்தின் ஷூட்டிங் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்து வருகிறது. முன்னதாக மும்பையில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கினார்கள்.

இந்நிலையில் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் சுட்டி மகளாக நடித்த மானஸ்வி தர்பார் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தர்பார் படத்தில் மானஸ்வி நயன்தாராவின் மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து முருகதாஸ் எதுவும் தெரிவிக்கவில்லை.
தர்பார் படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் வருவதாக கூறப்படுகிறது. ஒரு ரஜினிகாந்துக்கு நிவேதா தாமஸ் மகளாக நடிக்கிறாராம். மற்றொரு ரஜினிக்கு தான் நயன்தாரா ஜோடி என்று கூறப்படுகிறது. அப்படி என்றால் மானஸ்வி ரஜினியின் மகளாக நடிக்கிறார் போன்று.
தர்பார் பட ஸ்டில்ஸ், வீடியோக்கள் தொடர்ந்து கசிவதால் முருகதாஸ் அப்செட்டில் உள்ளார். அவர் கதை பற்றி இதுவரை எதுவுமே தெரிவிக்கவில்லை. படம் வரும்போது தியேட்டரில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டார்.

அத்திவரதரை குளத்திற்குள் வைக்கும் முன்பு ரஜினியும், நயன்தாராவும் தரிசனம் செய்தனர். ரஜினியும், நயன்தாராவும் தர்பார் படப்பிடிப்பில் கலந்து கொள்ள விமானத்தில் சென்றபோது எடுத்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
புகைப்படத்தில் இரண்டு பேருமே ரொம்ப சீரியஸாக முகத்தை வைத்திருந்ததை யாரும் கவனிக்காமல் இல்லை. தர்பார் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் தர்பார் ஆல்பம் வரும் நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நயன்தாராவுக்கு மிஸ்டர் லோக்கல், ஐரா, கொலையுதிர்காலம் ஆகிய மூன்று படங்கள் ஓடவில்லை. இந்நிலையில் தான் அவர் தர்பார், விஜய்யின் பிகில் ஆகிய படங்களை பெரிதும் எதிர்பார்க்கிறார்.


Click it and Unblock the Notifications











