ஆதிபுருஷ்.. பிரபாஸின் ராமாயணக் கதையில் சூர்ப்பனகையாக இவர்தான் நடிக்கணுமாம்.. ரசிகர்கள் அடம்!

By

சென்னை: பிரபாஸின் அந்த ராமாயணக் கதையில் சூர்ப்பனகையாக நடிக்க பிரபல நடிகையின் பெயரை பரிந்துரைப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

Recommended Video

ரூ. 100 கோடி சம்பளம் கேட்ட பாகுபலி நடிகர்.. எந்தப் படத்துக்குன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

தெலுங்கு நடிகர் பிரபாஸ், ராஜமவுலி இயக்கிய பாகுபலியில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

அவர் நடித்த சாஹோ படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியானது. அடுத்து ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வரும் அவர், இப்போது புதிய படத்தில் நடிக்கிறார்.

பர்ஸ்ட்லுக் போஸ்டர்

பர்ஸ்ட்லுக் போஸ்டர்

இந்தப் படத்துக்கு ஆதிபுருஷ் என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்திப் பட இயக்குனர் ஓம்ராவத் இயக்கும் இந்தப் படம் பற்றிய அறிவிப்பையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்தனர். தீமையை வெற்றிகொள்ளும் நன்மை என்ற கேப்ஷன் கொடுத்திருந்தனர். இந்திய காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

ராமாயண கதையின் ஒரு பகுதியை வைத்து இந்த படம் தயாராவதாகத் தகவல் வந்துள்ளது. இந்தி, தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிடுகின்றனர். இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், பிரபல இந்தி நடிகை ஒருவரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சவால் நிறைந்தது

சவால் நிறைந்தது

3டி படமாக உருவாகும் இந்த படம் பற்றி பிரபாஸ் கூறும்போது, ஒவ்வொரு கேரக்டரும் சவால் நிறைந்தது. இதுபோன்ற ஒரு கேரக்டரை திரையில் கொண்டுவருவது பொறுப்புமிக்கது, பெருமைக்குரியது. இயக்குநர் ஓம் விசேஷமாக வடிவமைத்துள்ள இந்த காவிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

சைஃப் அலிகான்

சைஃப் அலிகான்

இந்நிலையில், இந்தப் படத்தில், வில்லனாக இந்தி நடிகர் சைஃப் அலிகான் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இதற்கிடையே, ஆதிபுருஷ் போஸ்டரை பாராட்டிய நடிகை தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு, படத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்தார். அதற்கு கீழே ரசிகர் ஒருவர், சூர்ப்பனகையாக நீங்கள் நடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சூர்ப்பனகை

சூர்ப்பனகை

இன்னொருவர், சூர்ப்பனகையாக நடிப்பதற்காக, இயக்குனருக்கு உங்கள் பெயரை பரிந்துரைக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த விவாதம் ஜாலியாக சென்றுகொண்டிருக்க, களத்தில் புகுந்த நடிகை லட்சுமி மஞ்சு, 'நான் வந்துட்டேன், எதுல கையெழுத்து போடணும் சொல்லுங்க? என்று கிண்டலாகக் கேட்டுள்ளார். தெலுங்கு நடிகையும் நடிகர் மோகன்பாபுவும் மகளுமான லட்சுமி மஞ்சு தமிழில் கடல் உள்பட சில படங்களில் நடித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X