நேரடியாக தொலைக்காட்சியிலும்..நெட்பிளிக்ஸிலும் வெளியாகும் ‘மண்டேலா‘
சென்னை : யோகி பாபு நடித்துள்ள மண்டேலா திரைப்படம் ஏப்ரல் 4 ந் தேதி விஜய் டிவியில் நேரடியாக வெளியாக உள்ள நிலையில் ஏப்ரல் 5ந் தேதி நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
யோகிபாபு தர்மபிரபு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது காமேடி ஹீரோவாக கலக்கி வருகிறார்.
இயக்குனர் பாலாஜி மோகன் தயாரித்திருக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கி உள்ளார்.

ஷீலா ராஜ்குமார்
இவர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மண்டேலா என்ற திரைப்படத்தில் யோகிபாபு நடித்துள்ளார். இதில் யோகிபாபுக்கு ஜோடியாக அழகிய தமிழ் மகள் என்ற சீரியல் மூலம் பிரபலமான ஷீலா ராஜ்குமார் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும், சங்கிலி முருகன், கண்ணன் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பாராட்டுகளை பெற்றது
இந்நிலையில், மண்டேலா படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. இதில், யோகிபாபுவின் வழக்கமான லொள்ளு காமெடிகள் இடம் பெற்றுள்ளன. நெல்சன் மண்டேலா என்ற பெயரோடு வரும் யோகிபாபு நோட்டாவாவது கோட்டாவாவது காசு கொடுத்தான் ஓட்டு என் பஞ்ச் வசனம் பேசியுள்ளார்.

சமூக கருத்து பாடல்
டீசர் மட்டும்தான் நல்ல இருக்கும்னு பாத்த இப்படத்தில் இடம் பெற்ற ஒரு நீதி ஒன்பது சாதி என்ற வேறலேவலில் உள்ளது. பல சமூக கருத்துக்களை கொண்ட யுகபாரதியின் வரிகள் அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளது. இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். விது அய்யண்ணா என்பவர் ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

நெட்பிளிக்ஸில்
இந்நிலையில், இப்படம் நேரடியாக விஜய் டிவியில் ஏப்ரல் 4ந் தேதி காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5ந் தேதி நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த தகவலை இயக்குனர் பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











