68வது தேசிய விருதுகள் - மண்டேலா படத்திற்காக சிறந்த வசனகர்த்தாவாக மடோனி அஷ்வின் அறிவிப்பு!
சென்னை : நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடித்து கடந்த 2021ல் வெளியான படம் மண்டேலா.
அறிமுக இயக்குநர் மடோனி அஷ்வின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது தேசிய விருதையும் மண்டேலா படத்திற்காக மடோனி அஷ்வின் பெற்றுள்ளார்.

மண்டேலா படம்
நடிகர் யோகிபாபு நடிப்பில் கடந்த 2021ல் வெளியான படம் மண்டேலா. மடோனி அஷ்வின் இயக்கத்தில் அரசியல் நையாண்டி படமாக வெளியானது மண்டேலா. ஒய்நாட் ஸ்டூடியோஸ், விஸ்பெரி பிலிம்ஸ் மற்றும் ரிலயன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருந்தது.

சிறப்பான கவனம்
யோகி பாபு, ஷீலா ராஜசேகர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான மண்டேலா படம் அனைவரையும் சிறப்பாக கவர்ந்தது. சிறப்பான சமூக அக்கறையை வெளிப்படுத்தியது மண்டேலா படம். படத்தின் ஆரம்பம் முதலே ரசிகர்களை சிந்திக்கவும் அதே நேரத்ல் சிரிக்கவும் வைத்தது மண்டேலா.

சிறப்பான வசனம்
அற்புதமான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளுடன் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார் மடோனி அஸ்வின். கமர்ஷியல் படங்களை இயக்கி அதன்மூலம் வெற்றியை சாத்தியப்படுத்தி கோடிகளில் பணத்தை அள்ளும் இயக்குநர்கள் மத்தியில் கதையில் சமரசம் செய்துக் கொள்ளாமல் மடோனி அஷ்வின் கொடுத்திருந்த மண்டேலா படம் சிறப்பான வரவேற்பை பெற்றது.

மடோனி அஷ்வினுக்கு தேசிய விருது
இவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்று அனைத்து தரப்பினரும் கூறியிருந்தனர். இந்நிலையில் மண்டேலா படத்திற்கான சிறந்த வசனகர்த்தாவிற்கான விருது மடோனி அஷ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மண்டேலா படக்குழுவினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் மாவீரன் படம்
மண்டேலா படத்திற்கு பிறகு தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை இயக்கும் வாய்ப்பு தற்போது மடோனி அஷ்வினுக்கு கிடைத்துள்ளது. சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











