அடுத்த அதிர்ச்சி.. நடிகை மந்திரா பேடியின் கணவர் மரணம்.. மன்மதன் நடிகைக்கு பிரபலங்கள் இரங்கல்

மும்பை: நடிகை மந்திரா பேடியின் கணவர் ராஜ் கெளஷல் மாரடைப்புக் காரணமாக காலமானார்.

இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர் ராஜ் கெளஷல். அவரது திடீர் மரணத்தால் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் சோகத்தில் மூழ்கி உள்ளது.

பாலிவுட் நடிகையான மந்திரா பேடி தமிழில் சிம்புவின் மன்மதன் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாரடைப்பு

மாரடைப்பு

பிரபல பாலிவுட் நடிகை மந்திரா பேடியின் கணவரும் இயக்குநருமான ராஜ் கெளஷல் இன்று அதிகாலை மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மரண செய்தியை இயக்குநர் ஓனிர் சமூக வலைதளத்தில் அறிவித்தார். நடிகை மந்திரா பேடியின் சமூக வலைதள பக்கங்களில் இரங்கல்கள் குவிந்து வருகின்றன.

வீட்டிலேயே பிரிந்த உயிர்

வீட்டிலேயே பிரிந்த உயிர்

நடிகை மந்திரா பேடியின் கணவர் ராஜ் கெளஷலின் உயிர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை அவரது வீட்டிலேயே பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் முன்பே அவர் காலமாகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சினிமாவில் ஈடுபாடு

சினிமாவில் ஈடுபாடு

நடிகை மந்திரா பேடியின் கணவர் ராஜ் கெளஷல் இயக்குநராகவும் தயாரிப்பாளரகாவும் சினிமாவில் தனது ஈடுபாட்டை செலுத்தி வந்தார். 1999ம் ஆண்டு பியார் மெயின் கபி கபி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஷாதி கா லட்டு, அந்தோனி கவுன் ஹை உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். சில படங்களை தயாரித்தும் உள்ளார்.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

நடிகை மந்திரா பேடியின் கணவர் மறைந்த செய்தியறிந்த பாலிவுட் பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் மந்திரா பேடியின் சமூக வலைதளங்களில் RIP போட்டு வருகின்றனர். மந்திரா பேடிக்கு ஆறுதல்களும் கூறி வருகின்றனர்.

மன்மதன்

மன்மதன்

49 வயதாகும் நடிகை மந்திரா பேடி 1999ம் ஆண்டு இயக்குநர் ராஜ் கெளஷலை திருமணம் செய்துக் கொண்டார். 2004ம் ஆண்டு வெளியான சிம்புவின் மன்மதன் படத்தில் மனநல மருத்துவராக நடித்திருந்தார். 2019ம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ படத்தில் நடித்திருந்த மந்திரா பேடி, ஜிவி பிரகாஷின் அடங்காதே படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X