அடக்கொடுமையே, இது சேலையா, லுங்கியா, பிகினியா? பிரபல நடிகையை தாறுமாறாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

By

சென்னை: பிரபல நடிகை அணிந்துள்ள ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள சேலையை ரசிகர்கள் தாறுமாறாக கலாய்த்துள்ளனர்.

கவர்ச்சியாக நடிப்பது இப்போது பேஷனாகிவிட்டது. அது இல்லாமல் சினிமா இல்லை.

இந்நிலையில் பெரும்பாலான நடிகைகள் ஓவர் கிளாமராக போட்டோஷூட் நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

கிளாமர் போட்டோஷூட்

கிளாமர் போட்டோஷூட்

அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றனர். இன்ஸ்டாவை திறந்தால் அவர்களின் ஹாட் புகைப்படங்கள்தான் குப்பென்று முன்னால் வந்து நிற்கிறது. இதில் சிலர் வெளிநாட்டு கடற்கரைகளில் விதவிதமாக கிளாமர் போட்டோஷூட் நடத்தி பதிவு செய்கின்றனர்.

பாராட்டி கமென்ட்

பாராட்டி கமென்ட்

சிலர் ஒர்க் அவுட், நடனம், யோகா தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் பிகினி போட்டோக்களை வெளியிடுகின்றனர். இந்த போட்டோக்களை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்களின் இன்ஸ்டாவை பின் தொடர்கின்றனர். அவர்களின் அழகை பாராட்டி கமென்ட்களையும் பதிவு செய்கின்றனர்.

மந்திரா பேடி

மந்திரா பேடி

இந்நிலையில் இன்ஸ்டாவில் அடிக்கடி ஹாட் ஒர்க் அவுட் போட்டோக்களை பதிவு செய்யும் நடிகைகளில் ஒருவர் மந்திரா பேடி. இந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் சிம்புவின் மன்மதன் படத்தில் நடித்திருந்தார். அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடங்காதே என்ற படத்திலும் நடித்துள்ளார்.

சேலை போட்டோ

சேலை போட்டோ

46 வயதான மந்திரா பேடி, உடலை சிக்கென வைத்திருக்கிறார் இப்போதும். இவர் வித்தியாசமாக சேலை கட்டியபடி கிளாமராக ஒரு போட்டோவை பதிவு செய்துள்ளார். அதில் தொடைகள் தெரிவதுபோலவும் கால்களில் பூட்ஸ் அணிந்தும் தொப்புள் தெரிய போஸ் கொடுத்துள்ளார். அந்த சேலையின் மதிப்பு 28 ஆயிரம் ரூபாயாம்.

பிகினியா, லுங்கியா?

பிகினியா, லுங்கியா?

இந்த போட்டோவை ரசிகர்கள் கண்டபடி கலாய்த்துள்ளனர். ஒருவர், இதுக்கு பேரு சேலையா, பிகினியா, லுங்கியா? என்ன கொடுமை இது என்று கேட்டுள்ளார். இன்னொருவர் எங்கள் அம்மாக்களும் சகோதரிகளும் அணிந்த சேலை இது அல்ல, இது முழுவதும் உங்கள் ஃபேஷன். சேலையின் அர்த்தம் முழுவதுமாக மாறிவிட்டது என்று சீரியசாக கூறியிருக்கிறார்.

காலி பண்ணிடுங்க

காலி பண்ணிடுங்க

இன்னும் சிலர் அவரை விளாசியுள்ளனர். இந்த மாதிரி டிரெஸ் போட்டு, நம்ம கலாசாரத்தை காலி பண்ணிடுங்க என்று சிலர் தெரிவித்துள்ளனர். மேடம் இதை சகிக்க முடியலை, இதுமாதிரி காமெடியான டிரெஸ்சைலாம் அணியாதீங்க என்று சிலர் அட்வைஸ் செய்துள்ளனர்.

லுங்கி சேலை

லுங்கி சேலை

ஒருவர், அதெல்லாம் ஒண்ணுமில்ல, இந்த லுங்கி சேலை நல்லாதான் இருக்கு என்று தெரிவித்துள்ளனர். இந்த வயசுலயும் பிட்னஸ்ல மிரட்டுறீங்க என்று சிலர் கூறியுள்ளனர். ஒருவர், நீங்க என்னத்த வேணும்னாலும் கட்டிக்கோங்க. ஆனா, கலாசாரத்தையும் உங்க பேஷனையும் மிக்ஸ் பண்ணாதீங்க என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X