இவர் "ஜிலுஜிலு" மண்டோதரியா.. இல்லை "ஜிலீர்" மண்டோதரியா....?

By Sudha

சென்னை: திகில் படத்திற்கும் கவர்ச்சிப் படங்களுக்கும் எப்போதுமே ஒரு ரசிகர் கூட்டம் ரசிக்கக் காத்திருப்பது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவிலும் கூட வழக்கமானதுதான். எனவே இந்த ரசிகர்களை மையமாக வைத்து அவ்வப்போது படங்கள் வருவது வழக்கம்.

அதேசமயம், திரில்லோடு, கவர்ச்சியையும் சேர்த்துக் கொடுக்கும்போது அது ஒரு வித்தியாசமா கலவையாக மாறி கல்லாக் கட்டுவதும் வழக்கம்.

அப்படி ஒரு படம்தான் மண்டோதரி. இது திகில் படம்தானாம். கவர்ச்சிக்கும் இடம் இருக்கிறதாம்.

மைல்ஸ்டோன் மண்டோதரி

மைல்ஸ்டோன் மண்டோதரி

ஏ.தக்ஷணாமூர்த்தி வழங்க மைல் ஸ்டோன் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "மண்டோதரி" என்று பெயரிட்டுள்ளனர்.

உதவி இயக்குநரே.. கதை நாயகன்

உதவி இயக்குநரே.. கதை நாயகன்

இந்த படத்தில் கதை நாயகனாக பா.ரஞ்சித்குமார் அறிமுகமாகிறார். இவர் வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.

2 நாயகிகள்

2 நாயகிகள்

கதாநாயகிகளாக தாரீனா, பிரியா என இருவர் நடிக்கிறார்கள். இன்னொரு நாயகனாக அமர் நடிக்கிறார்.

பொன்னம்பலம்.. பாண்டு

பொன்னம்பலம்.. பாண்டு

இவர்களுடன் பொன்னம்பலம், பாண்டு, விசென்ட்ராய், நாகலட்சுமி, சுபா, திருவாரூர் கருத்திருமன், கமலகண்ணன், எழுமலை, தியாகராஜன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குனர் ஆர்.ஷம்பத் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறாராம்.

யாரது.. ஷம்பத்

யாரது.. ஷம்பத்

இந்தப் படத்தை இயக்குவது ஆர். ஷம்பத். இவர் யாரது என்ற திகில் படத்தை ஏற்கனவே இயக்கிய திரில் அனுபவம் நிரம்பியவர். படத்தின் கதை குறித்து ஷம்பத் சொன்னது....

அஜாக்கிரதையால் ஒரு அசம்பாவிதம்..

அஜாக்கிரதையால் ஒரு அசம்பாவிதம்..

மருத்துவ கல்லூரி மாணவர்களின் அஜாக்கிரதையால் கிராமத்துப் பெண் மண்டோதரிக்கு ஏற்படும் அசம்பாவிதம்...அந்த மாணவர்களின் வாழ்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பது தான் கதைக்களம்.

பாலக்காடு.. குமுளி.. கேரளா...

பாலக்காடு.. குமுளி.. கேரளா...

திகில் படமாக மண்டோதரி படம் உருவாகியுள்ளது. கேரளாவின் பாலக்காடு, குமுளி மற்றும் சேலம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்திருக்கிறது. விரைவில் திரைக்கு வர உள்ளது மண்டோதரி என்றார் ஆர்.ஷம்பத்.

வரட்டும் பார்க்கலாம்.. மண்டோதரி பயமுறுத்துகிறாளா இல்லையா என்பதை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X