பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மரணம்
சென்னை: பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 45.
மாண்டலின் சீனிவாஸ் 1969-ம் ஆண்டு ஆந்திராவில் உள்ள பாலகோலில் பிப்ரவரி மாதம் 28ம் தேதி பிறந்தார். 1994ம் மே 27ல் ஆந்திராவைச் சேர்ந்த யுவஸ்ரீயை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.
யுவஸ்ரீக்கும் மாண்டலின் சீனிவாஸ்க்கும் இடையே கடந்த 2009ம் ஆண்டு விவாகரத்தானது. 45 வயதான ஸ்ரீநிவாஸ் பத்ம ஸ்ரீ, சங்கீதா ரத்னா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர்.
கல்லீரல் பிரச்சனை தொடர்பாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், கடந்த 3ம் தேதி அனுமதிக்கப்பட்ட சீனிவாஸ் இன்று காலை 09.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சீனிவாஸ் மறைவிற்கு இசைக்கலைஞர்கள் பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். டிவிட்டர், ஃபேஸ்புக் சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

17 வயதில் கச்சேரி
சீனிவாஸ் தன்னுடைய 17வது வயதில் காஞ்சிபுரத்தில் மகாப்பெரியவர் முன் மாண்டலின் இசைக் கச்சேரி செய்துள்ளார். அப்போது மாண்டலினைத் தொட்டு ஆசிர்வாதம் செய்த பெரியவர் ஸ்படிக மாலையை பரிசளித்துள்ளார்.

சாயிபாபா சன்னதியில்
புட்டபர்த்தி சாய்பாபா முன்பு சீனிவாசும் அவர் தம்பி ராஜேஷும் மாண்டலின் கச்சேரி செய்தனர். இதனையடுத்து ஆகாயத்திலிருந்து நவரத்தின மோதிரம் ஒன்றை வரவழைத்து சீனிவாசுக்கு பரிசளித்துள்ளார். அதேபோல இன்னொன்றையும் உருவாக்கி ராஜேஸ்க்கும் அணிவித்தாராம். இதனையடுத்து உலகப் புகழ் பெற்ற சக்தி இசைக்குழுவில் இசைக்கும் வாய்ப்பு சீனிவாஸ்க்கு கிடைத்தது!

இசையமைப்பாளர்
சிருங்கேரி பாரதி தீர்த்தர் வாழ்க்கை வரலாறு சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளில் படமாக்கப்பட்டிருக்கிறது. அவற்றுக்கு சீனிவாஸ்தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகையுடன் தம்பி ராஜேஸ்
மாண்டலின் சீனிவாசின் தம்பி மாண்டலின் ராஜேஸ் உடன் நடிகை மீரா ஜாஸ்மின் நெருக்கமாக பழகினார் இருவருக்கும் திருமணம் நடந்து விட்டது என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கிசுகிசு பரவியது. ஆனால் மீரா ஜாஸ்மின் ஆனால் மீரா ஜாஸ்மின் அனில் ஜான் டைட்டஸ் என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications