புற்றுநோய் பாதிப்பால் அவதிப்படும் அப்பா.. மங்களவாரம் ஹீரோயின் வெளியிட்ட உருக்கமான போஸ்ட்

ஹைதராபாத்: சன்னா மெரய்யா எனும் பஞ்சாபி படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான பாயல் ராஜ்புத், தெலுங்கில் ஆர்எக்ஸ் 100, மங்களவாரம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தனது தந்தை புற்றூநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கான கீமோதெரபி சிகிச்சையை அளிக்கப் போவதாகவும் சற்றுமுன் சமூக வலைதளத்தில் உருக்கமான போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பஞ்சாபி பெண்ணான பாயல் ராஜ்புத் பஞ்சாபி மொழியில் நடிக்கத் தொடங்கிய நிலையில், அவருக்கு பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன் பின்னர் தெலுங்கு சினிமாவில் அவருக்கு பல பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

Mangalavaaram Actress Payal Rajput father gets Cancer treatment

தமிழில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து ஏஞ்சல் படத்திலும் இவர் நடித்து வந்தார். ஆனால், அந்த படம் அதன் பின்னர், முழுமையாக உருவாகாமல் கிடப்பில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

32 வயது நடிகை: பாயல் ராஜ்புத் பஞ்சாபி, இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 32 வயதாகும் இவர் நடிப்பில் 2023ம் ஆண்டு வெளியான மங்களவாரம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. மேலும், அந்த படத்தில் விவகாரமான கில்மா நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக இவர் நடித்திருந்தது பல சர்ச்சைகளையும் கிளப்பியது. மேலாடை அணியாமல் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே பரபரப்பை பற்ற வைக்க படமும் ரசிகர்களை ஏமாற்றாமல் பிட்டு படம் போலவே திகிலுடன் கலந்து உருவாகி ஹிட் கொடுத்தது.

கைவசம் பல படங்கள்: கடந்த ஆண்டு ரக்‌ஷனா எனும் படத்தில் நடித்திருந்தார். தமிழில் கோல்மால் படமும் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் ஆகாமல் காத்துக் கொண்டிருக்கிறது. கிராதகா எனும் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். மங்களவாரம் 2 படமும் உருவாகும் என்கின்றனர்.

அப்பாவுக்கு கேன்சர்: 2010ம் ஆண்டு முதல் சின்னத்திரையில் நடிகையாக வலம் வந்த பாயல் ராஜ்புத் 2017ம் ஆண்டு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில், அவர் தனது தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் கிம்ஸ் மருத்துவமனையில் அவருக்கான கீமோதெரபி சிகிச்சை நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் பிரார்த்தனையால் அவர் பூரண குணமடைவார் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். பாயல் ராஜ்புத்தின் இந்த பதிவை பார்த்த நடிகைகள் ராய் லட்சுமி, திவ்யா பிள்ளை உள்ளிட்ட பலர் தைரியமாக இருங்க, அப்பாவுக்கு ஒன்றும் ஆகாது. அவர் பூரண நலத்துடன் திரும்புவார் என ஆறுதல் கூறி வருகின்றனர். நடிகர் சிவராஜ்குமார் புற்றுநோய் பாதிப்பில் இருந்து சமீபத்தில், மீண்டும் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X