For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மார்ச் 27 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும்...பிரபல நெடுந்தொடர்களின் சங்கமம்

  |

  சென்னை: மாங்கல்ய சந்தோஷம் மற்றும் அம்மன் என்ற தனது பிரபல நெடுந்தொடர்களின் மகாசங்கமத்தை ஒளிபரப்ப தயார்நிலையில் கலர்ஸ் தமிழ் இருக்கிறது .

  பார்வையாளர்களை மகிழ்வித்து, குதூகலத்தில் ஆழ்த்த வேண்டுமென்ற தனது முயற்சிகளை தொடர்ந்து செய்து வரும் கலர்ஸ் தமிழ், அதன் பிரசித்தி பெற்ற தொடர்களான மாங்கல்ய சந்தோஷம் மற்றும் அம்மன் ஆகியவற்றின் நிகழ்ச்சிகளை அடுத்த 2 வார காலஅளவில் ஒன்றாக இணைத்து ஒரு மகாசங்கம நிகழ்வாக வழங்க திட்டமிட்டிருக்கிறது.

  3 மாறுபட்ட கேரக்டர்களில் விஜய்...தளபதி 65 அடுத்த அப்டேட்டும் வெளியானது 3 மாறுபட்ட கேரக்டர்களில் விஜய்...தளபதி 65 அடுத்த அப்டேட்டும் வெளியானது

  இந்த மகா சங்கம எபிசோடுகள், நித்யா (லட்சுமிபிரியா நடிப்பில்) மற்றும் சக்தி (பவித்ரா கௌடா நடிப்பில்) இரு கதாபாத்திரங்கள், அவர்களது பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை கண்டறிய முற்படுகின்ற ஆர்வமூட்டும் கதைக்களத்தை ஒளிபரப்பும்.

  இரவு 7.00 மணிக்கு

  இரவு 7.00 மணிக்கு

  மார்ச் 15 ஆம் தேதியிலிருந்து தொடங்கிய மகாசங்கமம் எபிசோடுகள், மார்ச் 27 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகின்றன. இதில் மக்களின் மனம் கவர்ந்த ரக்‌ஷிதா மகாலட்சுமி அற்புதமான கதாபாத்திரத்தில் அம்மனாக தனது நடிப்புத் திறனை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பதை காணலாம்.

  நித்யா மற்றும் சக்தி

  நித்யா மற்றும் சக்தி

  மகாசங்கமம் எபிசோடுகள், இரு வேறுபட்ட கதைகளின் ஒரு கலவையாகும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அக்னிஅம்மன் திருவிழாவிற்காக பரபரப்பாக தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு கோவிலில், இதன் முதன்மை கதாபாத்திரங்களான நித்யா மற்றும் சக்தி சந்திக்குமாறு விதி திட்டமிட்டிருக்கிறது.

  பல்வேறு சூழ்நிலைகளின்

  பல்வேறு சூழ்நிலைகளின்

  கோவிலில், குளத்திலிருந்து அம்மனது திருவுருவச்சிலையை வெளியில் எடுப்பதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கின்ற பெண்களின் ஒரு குழுவிற்கு எதிராக சக்தியும், நித்யாவும் கோவிலில் போட்டியிடுவதை இதில் காணலாம். இதற்கிடையே ஈஸ்வர் (அமல்ஜித் நடிப்பில்), சமரசம் மற்றும் சக்தியின் தந்தை தேவாவுடன் (நடன இயக்குனர் தருண் நடிப்பில்) ரஞ்சித் என பலரும் பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக அதே நேரத்தில் அங்கு இருக்க நேரிடுகிறது.

  ஈடுபாட்டுடன் ஒன்றிப்போகுமாறு

  ஈடுபாட்டுடன் ஒன்றிப்போகுமாறு

  நித்யாவிற்கும், சக்திக்கும் என்ன நிகழப்போகிறது? அவர்களது பயணத்தில் இன்னும் அதிக தடைகளும், பிரச்சனைகளும் இருக்கப்போகின்றனவா? என்ற கேள்விகளுக்கு மகாசங்கமம் நிகழ்ச்சி குறித்து கலர்ஸ் தமிழ் - ன் பிசினஸ் ஹெட் அனூப் சந்திரசேகரன் கூறியதாவது: பார்வையாளர்களை கதை நிகழ்வுகளோடு பின்னிப்பிணைந்தவாறு இருப்பதை உறுதிசெய்கின்ற திடீர் திருப்பங்களையும், ருசிகரமான நிகழ்வுகளையும் கொண்ட ஒரு சிறப்பான கதையை காட்சிப்படுத்துகின்ற இந்த எபிசோடுகளில் பிரமாதமான திறமை கொண்ட எமது நட்சத்திரங்கள் ஒன்றாக இணைகின்றனர். ஏராளமான திருப்பங்கள் மற்றும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகளோடு தனிச்சிறப்பான சித்தரிப்பை மகாசங்கமம் எபிசோடுகள் கொண்டிருப்பதால் எமது பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் இதில் ஒன்றிப்போகுமாறு இது செய்யும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்." என்று கூறி உள்ளார் .

  ரக்‌ஷிதா மகாலட்சுமி

  ரக்‌ஷிதா மகாலட்சுமி

  அம்மன் கதாபத்திரத்தில் நடிப்பது குறித்து பேசிய நடிகை ரக்‌ஷிதா மகாலட்சுமி, "கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் மாங்கல்ய சந்தோஷம் மற்றும் அம்மன் நெடுந்தொடர்களை நான் மகிழ்ச்சியோடு பார்த்து ரசித்திருக்கிறேன். இவைகளின் மகாசங்கமம் சிறப்பு நிகழ்வுக்காக இந்த இரு தொடரின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரோடு சேர்ந்து பணியாற்றுவது உண்மையிலேயெ கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. அம்மன் கதாபாத்திரத்தில் நடித்தது உண்மையிலேயே பிரமிப்பூட்டும் ஒரு அனுபவமாகும். மகாசங்கமம் எபிசோடுகளின் ஒட்டுமொத்த கதைக்களமும் வழக்கத்திற்கு மாறான ஒரு திருப்பத்தை உருவாக்கும். இக்கதாபாத்திரத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்பு ஒரு அற்புதமான அனுபவம் என்றே நான் கூறுவேன். இதில் நடிப்பதை நான் மகிழ்ச்சியோடு அனுபவித்ததைப் போலவே, பார்வையாளர்களும் எனது இந்த கதாபாத்திரத்தை ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று கூறினார்.

  English summary
  Mangalyadosham serial, Amman serial sangamam in colors TV.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X