»   »  நடிகையை கர்ப்பம்-உதவி கைது

நடிகையை கர்ப்பம்-உதவி கைது

Subscribe to Oneindia Tamil

துணை நடிகையை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்து தலைமறைவான உதவி இயக்குநரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் பிந்தியா. கோடம்பாக்கம் டைரக்டர்ஸ் காலனியில் வசித்த வருகிறார். வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட சிலபடங்களில் நடித்துள்ளார்.

நடிப்போடு, பேஷன் டிசைனிங்கிலும் ஈடுபட்டு வரும் பிந்தியா சில குறும் படங்களிலும் நடித்துள்ளார். போலீஸாரால் சிறையில் கற்பழிக்கப்பட்டரீட்டாமேரியின் கதை குறும் படமாக தயாரிக்கப்பட்டபோது அதில் ரீட்டா மேரி கேரக்டரில் நடித்துள்ளார்.

அவருக்கும் இயக்குநர் கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த மணிகண்டனுக்கும் இடையே 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஏற்பட்டது.காக்க காக்க படம் பச்சைக்கிளி முத்துச்சரம் வரை கெளதமிடம் உதவியாளராக இருந்து வருகிறார் மணிகண்டன் . இவருக்கும் திருச்சி மாவட்டம்தான்சொந்த ஊர்.

மணிகண்டனும், பிந்தியாவும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்திருந்தனர். திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்தானே என்றுமணிகண்டனுடன் ஜாலியாக இருந்துள்ளார். இதனால் கர்ப்பம் அடைந்தார் பிந்தியா.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் கர்ப்பத்தை கலைக்கும்படி கூறினார். ஆனால் பிந்தியா அதை மறுத்தார். கடந்த மாதம் பிந்தியா தன்னைதிருமணம் செய்துகொள்ளும்படி மணிகண்டனை மீண்டும் வற்புறுத்தினார். அப்போது மணிகண்டன், கருவை கலைத்து விடு. மறுநாளே திருமணம்செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இதனால் பிந்தியா கடந்த மாதம் தனது கர்ப்பத்தை கலைத்தார். அதன்பிறகு மணிகண்டன் பிந்தியாவை சந்திப்பதை நிறுத்திக் கொண்டதுடன்,போனில் பேசுவதையும் தவிர்த்தார். சமீபத்தில் தன் தோழிகள் மூலம் மணிகண்டனை பிந்தியா தொடர்பு கொண்டார். அப்போது தன்னை திருமணம்செய்துகொள்ள மீண்டும் வற்புறுத்தினர். ஆனால் மணிகண்டன் ஏற்கவில்லை.

அடுத்த ஆண்டு நான் தனியாக படம் இயக்கப் போகிறேன். அதன் பின் நான் முன்னணி டைரக்டராகி விடுவேன், அதன் பின் என்னை தேடி பெரியஇடத்து பெண்கள் எல்லாம் வருவார்கள். எனவே உன்னை திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. இனியும் என்னை தொந்தரவுசெய்தால் தொலைத்து விடுவேன் என கூறியுள்ளார்.

இதையடுத்து பிந்தியா தி.நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி என்னை கற்பழித்துவிட்டார் என கூறியுள்ளார். இந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் உதவி இயக்குனர் மணிகண்டனை கைது செய்தனர்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil