“மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் பான் இந்தியா ஸ்டார்ஸ்”: பொன்னியின் செல்வன் சக்ஸஸ் சீக்ரெட் சொன்ன விக்ரம்!
சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
பொன்னியின் செல்வன் படத்தை காண ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கண்டிப்பாக வெற்றிபெறும் என விக்ரம் தெரிவித்துள்ளார்.

நாளை வெளியாகும் பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நாளை (செப்.30) உலகம் முழுவதும் வெளியாகிறது. லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்ட டாப் ஸ்டார்ஸ்கள் இணைந்து நடித்துள்ளனர். கோலிவுட்டின் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் நாளை வெளியாகவுள்ளது ரசிகர்களை ஹைப்பில் வைத்துள்ளது.

ரசிகர்களிடம் உற்சாக வரவேற்பு
பொன்னியின் செல்வன் தமிழில் உருவாகி இருந்தாலும், பான் இந்தியா படமாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியாகிறது. இதனால் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கொச்சி, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி நகரங்களில் ப்ரோமோஷன் செய்துவிட்டு நேற்று சென்னை திரும்பினர். பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நடைபெற்ற அனைத்து நகரங்களிலும் படக்குழுவினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விக்ரம் சொன்ன சக்சஸ் சீக்ரட்
இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய பொன்னியின் செல்வன் படக்குழுவினர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விக்ரம், இந்தியா முழுவதும் பொன்னியின் செல்வன் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது எனக் கூறினார். மேலும், "பொன்னியின் செல்வன் படத்துக்காக பிற மாநிலங்களுக்கு சென்றபோது வரவேற்பு சிறப்பாக இருந்தது. நாம் நமது சோழர்களின் பெருமையை சொல்லும்போது மற்ற மாநிலத்தவர்களும் சோழர்களை கொண்டாடத் தொடங்கி விட்டனர். இந்த படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது" என்றார்.

பான் இந்தியா பற்றி விக்ரம்
தொடர்ந்து பேசிய விக்ரம், "மணிரத்னம் ஏற்கனவே ரோஜா, பம்பாய் போன்ற படங்கள் மூலம் பான் இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார். அதேபோல், ஏஆர் ரஹ்மானும் பாலிவுட்டில் தொடர்ந்து பயணித்து வருகிறார். பான் இந்தியா ஸ்டார்களான இவர்கள் இருவருமே பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு முதல் படியாக இருப்பார்கள். அதனால், இந்தப் படம் நிச்சயம் மிகப் பெரிய வெற்றியடையும்" எனக் கூறினார். விக்ரமின் இந்த நம்பிக்கை நனவாகுமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிவிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











