PS 2 : ராஜராஜ சோழன் இந்து கடவுளா? சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த மணிரத்னம்!
சென்னை : பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழன் இந்து கடவுளாக சித்தரித்துள்ளதாக எழுந்த சர்ச்சைக்கு இயக்குநர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் தியேட்டரில் வெளியாகி வசூலை அள்ளியது.

இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா, பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் நாவல் : ஆடிப் பெருக்குத் திருநாளில், கடல்போல் பரந்து விரிந்திருந்த வீராணம் ஏரிக்கரையின் அழகை ரசித்தபடி குதிரையில் பயணித்த வந்தியத் தேவனோடு தொடங்கும் பொன்னியின் செல்வன் நாவல். அந்த புத்தகத்தை படிக்க தொடங்கும் போதே, வீராணம் ஏரியின் அழகை ரசித்தபடி நாமும் சோழர் காலத்துக்குள் பயணிக்கத் தொடங்கிவிடுவோம். ஒவ்வொரு வரியிலும் அந்த காட்சி நம் கண் முன் தோன்றும் இதுதான் இந்த நாவலின் வெற்றிக்கு முக்கிய காரணம்
500 கோடி வசூல் : பொன்னியின் செல்வன் நாவலை படித்த புத்தக பிரியர்கள், நாவலில் வரும் கதாபாத்திரத்தை உயிருடன் திரையில் காண ஆவலுடன் காத்திருந்து கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வந்து ரசித்தனர். இத்திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. இதைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக உள்ளது.

ஆதித்த கரிகாலனை கொல்வது யார் : பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான ப்ரோமோஷன் பல ஊர்களில் நடைபெற்ற நிலையில் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் மணிரத்னம், விக்ரம், திரிஷா, கார்த்தி,ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், விக்ரமிடம் புத்தகத்தில் ஆதித்தகரிகாலனை யார் கொன்றது என்று இருக்காது. படத்தில் யார் கொல்வார் என்று ஒரு செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்க, படத்தின் ஹைப்பே அதுதான் இதை சொன்னால் சுவாரசியம் இருக்காது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்றார்.

ராஜ ராஜ சோழன் இந்து கடவுளா : படத்தில் ராஜ ராஜ சோழன் இந்து கடவுளாக சித்தரித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது குறித்து, செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மணிரத்னம், இந்த சர்ச்சை தேவையில்லாத ஒன்று, பொன்னியின் செல்வன் புனையப்பட்ட கதாபாத்திரங்களுடன் கூடிய ஒரு வரலாற்று கதை. அதில் எதற்கு மதத்தை பற்றியெல்லாம் கொண்டு வருகிறீர்கள்.
தேவையில்லாத சர்ச்சை : ராஜ ராஜ சோழன் ஆட்சிகாலத்தில் அவர் செய்த செயல்களையும், சாதனைகளையும் நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். இது கல்கி எழுதியதை வைத்து எடுக்கப்பட்ட படம். இதைத் தாண்டி தேவையில்லாத சர்ச்சைகள் தேவைஇல்லை என்று பதில் அளித்த மணிரத்னம், படம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விக்கு நிதானமாக பதில் அளித்தார்.


Click it and Unblock the Notifications











