»   »  இயக்குநர் மணிரத்னத்திற்கு நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதி

இயக்குநர் மணிரத்னத்திற்கு நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் (59), நெஞ்சுவலி காரணமாக டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை தன குழுவினருடன் மணிரத்னம் கொண்டாடி வருகிறார்.

Mani Ratnam hospitalised

இந்த நிலையில் காஷ்மீரில் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க சென்றபோது, நெஞ்சு வலி ஏற்பட்டதால் டெல்லி இந்திர பிரசாதா அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது மணிரத்தினத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் உடல்நிலை பற்றிய வேறு எந்த செய்தியையும் வெளியிட மருத்துவமனை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இருப்பினும் இயக்குநர் மணிரத்னத்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், அவர் ஓய்வு எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

"ராவணன்' படத்தின் படப்பின் போது மணிரத்னத்துக்கு லேசான நெஞ்சுவலி எற்பட்டது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

English summary
Film director Mani Ratnam was hospitalised in Indraprastha Apollo Hospital here late on Tuesday afternoon. While doctors confirmed that he was under medical care, they refused to say whether he had been brought in following an accident or cardiac complaints.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil