பொன்னியின் செல்வன் வெற்றி அவருக்கு மட்டுமே சொந்தம்... ஜெயம் ரவி படத்துக்கு 100 கோடி பட்ஜெட்டா?
சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பரில் வெளியானது.
ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கும் மேல் வசூலித்தது.
அடுத்த மாதம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ள நிலையில், ஜெயம் ரவியின் 32வது படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து எமது தமிழ் ஃபிலிமிபீட் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த வலைப்பேச்சு பிஸ்மி, JR 32 படத்தின் பட்ஜெட் பற்றி விளக்கம் கொடுத்துள்ளார்.

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்
எம்ஜிஆர், கமல் ஆகியோரால் முடியாமல் போன பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் சாத்தியப்படுத்தினார். லைகாவின் பிரம்மாண்டமான தயாரிப்பில் இரண்டு பாகங்களாக உருவானது பொன்னியின் செல்வன். இதன் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி 500 கோடிக்கும் மேல் வசூலித்தது. விக்ரம் ஆதித்த கரிகாலன் பாத்திரத்திலும், கார்த்தி வந்தியத்தேவனாகவும் நடித்துள்ளனர். அதேபோல், ஜெயம் ரவி ராஜராஜ சோழன் கேரக்டரில் நடித்திருந்தார்.

மெகா பட்ஜெட்டில் ஜெயம் ரவி 32
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது செகண்ட் பார்ட்டும் வெளியாகவுள்ளது. இதுவும் தாறுமாறான வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வனில் நடித்த பின்னர் ஜெயம் ரவியின் மார்க்கெட் வேல்யூ உயர்ந்துவிட்டதாக சொல்லப்பட்டது. மேலும், அவர் நடிக்கவுள்ள JR 32 திரைப்படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வலைப்பேச்சு பிஸ்மி விளக்கம்
பொன்னியின் செல்வன் சக்சஸ் தான் ஜெயம் ரவி இவ்வளவு பெரிய ப்ராஜக்ட்டில் கமிட்டாக காரணம் என தகவல் வெளியானது. ஆனால் இதுக்குறித்து ஃபிலிமிபீட் யூடியூப் தளத்துக்கு பேட்டியளித்த பிரபல சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி விளக்கம் கொடுத்துள்ளார். அதில், பொன்னியின் செல்வன் வெற்றிக்கு மணிரத்னம் மட்டுமே காரணம். அவர் இல்லாமல் இந்த ப்ராஜக்ட் இவ்வளவு பெரிய வெற்றியடைந்திருக்க வாய்ப்பில்லை. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோருக்கு இதில் துளியும் பங்கு கிடையாது எனக் கூறியுள்ளார்.

100 கோடி பட்ஜெட்டா..?
மேலும், ஜெயம் ரவி நடிப்பில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படம் 100 கோடி பட்ஜெட்டல்லாம் கிடையாது. அவரை நம்பி அவ்வளவு பெரிய பட்ஜெட்டை ஐசரி கணேஷ் ஒதுக்க மாட்டார். அது சும்மா பிஸினஸ் ஸ்ட்ராட்டஜி எனக் கூறியுள்ளார். அதேபோல், பொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பின்னர் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப் பெரிய தோல்வி அடைந்தது. முதல் நாளிலேயே அகிலன் படத்துக்கு தியேட்டரில் ஜீரோ ஆடியன்ஸ் என்பது தான் ரிசல்ட். அதனால், பொன்னியின் செல்வனை நம்பி ஜெயம் ரவி சம்பளத்தையும் உயர்த்த மாட்டார் என பேசியுள்ளார்.

பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன்
இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் விரைவில் PS 2 ப்ரோமோஷன் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே வரும் 29ம் தேதி பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் ரஜினி, கமல், விஜய், இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











