என்ன கொடுமை மணி சார் இது? உங்க காவியத்தை எப்படி கண்ட்றாவியா மாத்தி விட்டு இருக்காங்கனு பாருங்க!

சென்னை: தமிழ் சினிமாவில் மிகவும் முக்கிய இயக்குநர் மணிரத்னம். இவரது திரை மொழிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களில், முதல் பாகத்திற்கு மட்டும் நான்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. இவரது இயக்கத்தில் வெளியான பல படங்கள் இன்றைக்கும் சினிமா கல்லூரிகளில் சினிமா குறித்த விவாதங்களில் இடம் பெறும் அளவிற்கு தரமான படங்களாக இடம் பெற்று வருகின்றது.

இவரது பல படங்களை பல மொழிகளில் உரிமை வாங்கி ரீமேக் செய்துள்ளனர். அந்த அளவிற்கு இந்திய அளவில் மிகவும் முக்கியமான இயக்குநராக உள்ளார். இவரது இயக்கத்தில் கடந்த 1986ஆம் ஆண்டு வெளியான படம் மௌன ராகம். இந்தப் படத்தில் மோகன், ரேவதி மற்றும் கார்த்தி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையில் வெளியான இந்தப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இன்றைக்கும் யூடியூப் தளத்தில் அதிகம் தேடப்படும் பாடல்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளது.

Mani Ratnam Mouna Ragam Karthik

இந்நிலையில் இந்தப் படத்தின் உரிமையை மாற்று மொழிகளில் வாங்கி அதனை ரீமேக் செய்துள்ளனர். அதில் படத்தினை மிகவும் மோசமாக ரீமேக் செய்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த ரசிகர்கள், மௌனரகம் படத்திற்கும் ரீமேக் படத்திற்கும் எவ்வளவு வித்தியாசங்கள் உள்ளது என வீடியோக்களையே இணைத்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Mani Ratnam Mouna Ragam Karthik

மௌனராகம்: குறிப்பாக தற்போது பகிர்ந்து வரும் வீடியோவில் மௌனராகம் படத்தின் ஃப்ளாஷ் பேக் காட்சிதான். அதாவது ஃப்ளாஷ் பேக் காட்சியில், நடிகர் கார்த்தி காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படுவார். அப்போது அவரிடம் மன்னிப்பு கேட்க ரேவதி காத்துக்கொண்டு இருப்பார். மேலும், கார்த்திக்கை காவல்துறையினர் தாக்கி இருப்பதைப் போலவும் காட்சி இருக்கும். கார்த்திக்கிடம் ரேவதி மன்னிப்பு கேட்டதும், கார்த்திக் ரேவதியைப் பார்த்து லேசாக கண்களைச் சிமிட்டிவிட்டு சிரித்துக் கொண்டு மிகவும் ஜாலியாகச் செல்வார்.

Mani Ratnam Mouna Ragam Karthik

சகிக்கல: இந்தக் காட்சியை ரீமேக் படங்களில் கலாய்க்கும் அளவிற்கு எடுத்து வைத்துள்ளனர். ஒரு படத்திலே ரேவதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகி சிரிப்பதைப் போல காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. அதற்கு கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகனோ சிரித்துக்கொண்டு போகும் காட்சியெல்லாம் பார்க்க சகிக்கல. அதேபோல் கன்னடத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடிகர் சிவ ராஜ்குமார் நடித்துள்ளார். இந்த காட்சிகளும் பாராட்டும்படியாக இல்லை. இதனைப் இணையத்தில் பகிர்ந்துள்ள ரசிகர் ஒருவர், " மெளன ராகத்தை மற்ற மொழியில் எப்படி சிதைச்சு இருக்கானுங்க என பாருங்க மக்களே...!!!" என கேப்ஷனும் இட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X