»   »  'பிரேமம்' சாய் பல்லவியுடன் ஜோடி போட எடையைக் குறைக்கும் கார்த்தி

'பிரேமம்' சாய் பல்லவியுடன் ஜோடி போட எடையைக் குறைக்கும் கார்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிரத்னத்தின் அடுத்த படத்தில் தான் நாயகனாக நடிப்பதை நடிகர் கார்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதி செய்திருக்கிறார்.

கடந்தாண்டில் வெளியாகி ஹிட்டடித்த ஓ காதல் கண்மணி படத்திற்குப் பின் மணிரத்னம் இயக்கப் போகும் அடுத்த படம் என்ன? யாரை இயக்கப் போகிறார்? என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

Mani Ratnam Next Hero Karthi

மணிரத்னம் அடுத்து இயக்கப் போவது இவரைத்தான் என்று வரிசையாக துல்கர் சல்மான், நானி, கார்த்தி ஆகிய நடிகர்களின் பெயர்கள் அடிபட்டன.

இந்நிலையில் மணிரத்னத்தின் அடுத்த ஹீரோ கார்த்தி என்பது தற்போது உறுதியாகி இருக்கிறது. இதனை நடிகர் கார்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதி செய்திருக்கிறார்.

இதில் நடிப்பதற்காக தான் உடல் எடையைக் குறைக்கப் போவதாகவும், தனக்கு ஜோடியாக சாய் பல்லவி (பிரேமம்) நடிப்பதாகவும் கார்த்தி தெரிவித்திருக்கிறார்.

இந்த படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக மணிரத்னத்தின் உதவி இயக்குனராக ஆயுத எழுத்து படத்தில் கார்த்தி பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

English summary
After O Kadhal Kanmani Mani Ratnam next to Team up with Karthi. The Official Announcement can be Expected Soon.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos