மணிரத்னம் புதிய படத்துக்கு ரூ 100 கோடி பட்ஜெட்... ஆக்ஷன் குயினாக ஐஸ்வர்யா ராய்!
கடல் படம் சுனாமியில் சிக்கிய பிறகு கொஞ்சகாலம் மனைவியோடு சினிமா விழாக்கள், பேஷன் ஷோக்களுக்குப் போய் வந்து கொண்டிருந்த மணிரத்னம், இப்போது மீண்டும் ரெடி டேக் ஆக்ஷன் சொல்லத் தயாராகிவிட்டார்.
ஐஸ்வர்யா ராய், நாகார்ஜூனாவை வைத்து அவர் தெலுங்கு - தமிழில் உருவாக்கும் புதிய படத்தின் பணிகளைத் தொடங்கியுள்ளாராம்.

ரூ 100 கோடி
இந்தப் படத்துக்கு ரூ 100 கோடி பட்ஜெட் என முடிவெடுத்துள்ள மணி ரத்னம், தென்னிந்தியாவின் டாப் நடிகர் நடிகைகளை இதில் களமிறக்குகிறார்.

மகேஷ் பாபு
ஐஸ்வர்யா ராய் - நாகார்ஜூனா தவிர, மகேஷ் பாபு, ஸ்ருதி ஹாஸனும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரியல் ஜோடிகளான பகத் பாசில் - நஸ்ரியாவை ஜோடியாக நடிக்க வைக்கும் திட்டமும் உள்ளதாம்.

ஆக்ஷன் குயின்
ஐஸ்வர்யா ராயை இந்தப் படத்தில் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிக்க வைக்கப் போகிறாராம் மணிரத்னம்.

ஸ்பான்ஸர்ஸ்
இந்தப் படத்தை தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க ஒரு மெகா ஸ்பான்சரையும் தேடி வருகிறாராம் மணி ரத்னம்.


Click it and Unblock the Notifications











