Maniratnam: பொன்னியின் செல்வன் 2-வை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்... மணிரத்னம் போட்ட மாஸ்டர் பிளான்

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் கடந்த 28ம் தேதி வெளியானது.

லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

அதேபோல், பொன்னியின் செல்வன் 2 படத்தை நெட்டிசன்களும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

 Mani Ratnam plans to release KH234 update as Ponniyin Selvan 2 gets trolled

பொன்னியின் செல்வன் 2 ட்ரோலில் இருந்து தப்பிக்க மணிரத்னம் பக்கா ப்ளான் ஒன்றை போட்டுள்ளாராம்.

மணிரத்னம் போட்ட மாஸ்டர் பிளான்
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது. லைகாவின் பிரம்மாண்டமான தயாரிப்பில் இரண்டு பாகங்களாக உருவான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதன்படி கடந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம், சூப்பர் ஹிட்டானது.

அதனைத் தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் 2ம் பாகமும் ரிலீஸாகியுள்ளது. கடந்த 28ம் தேதி ரிலீஸான இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. அதேநேரம் பொன்னியின் செல்வன் 2வில் இருக்கும் சில குறைகளை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். முக்கியமாக ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்துகொள்வது, சண்டைக் காட்சிகள் போன்றவை ட்ரோல் செய்யப்படுகின்றன.

இதனால், இதுகுறித்து இயக்குநர் மணிரத்னமும் விளக்கம் கொடுத்திருந்தார். ஆனாலும், நெட்டிசன்கள் ட்ரோல் செய்வது தொடர்கதையாகி வருகிறது, மேலும் பொன்னியின் செல்வன் 2 வசூலும் முதல் பாகத்திற்கு இருந்ததை விட தற்போது ரொம்பவே குறைந்துள்ளது. தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ட்ரோல் செய்யப்படும் என்பதால், ரசிகர்களை சமாளிப்பதற்காக மணிரத்னம் பக்கா பிளான் ஒன்றை போட்டுள்ளாராம்.

அதன்படி, மணிரத்னம் அடுத்து கமலுடன் இணையவுள்ள KH 234 படத்தின் அப்டேட்டை வெளியிடவுள்ளாராம். ஏற்கனவே இந்தக் கூட்டணி இணைவது குறித்து கமலின் பிறந்தநாளில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. பொன்னியின் செல்வன் 2 ரிலீஸானதும் தான் KH 234 படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என சொல்லப்பட்டது. அதன்படி தற்போது பொன்னியின் செல்வன் 2 வெளியாகிவிட்டது. ஆனால், திட்டமிட்டதைவிட விரைவில் KH 234 அப்டேட் வெளியாகவுள்ளதாம்.

 Mani Ratnam plans to release KH234 update as Ponniyin Selvan 2 gets trolled

கமலின் மோஷன் போஸ்டர், டைட்டில் டீசர் ஆகியவற்றுடன் KH 234 படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிடவுள்ளாராம் மணிரத்னம். இதற்காக கமல் நடிக்கும் ப்ரோமோ வீடியோவை விரைவில் ஷூட் செய்ய மணிரத்னம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதனால் விரைவில் KH 234 அப்டேட் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயன்ட், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

அதேபோல், கமல் ஜோடியாக வித்யா பாலன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் நயன்தாரா அல்லது த்ரிஷா நடிக்கலாம் என தகவல் வெளியான நிலையில், தற்போது வித்யா பாலன் இணையலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கமல் - மணிரத்னம் கூட்டணியில் 1987ம் ஆண்டு வெளியான நாயகன், இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அதன்பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணி இணையாத நிலையில், தற்போது KH 234 உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. KH 234 படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X