தக் லைஃப் பட ஷூட்டிங்.. சிம்புவை பார்த்து ஆடிப்போன மணிரத்னம்.. அப்படி என்ன நடந்தது?
சென்னை: விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனையடுத்து உற்சாகமடைந்த அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதும், படங்களை தயாரிப்பதும் என பிஸியாக இருக்கிறார். தற்போது அவர் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் தக் லைஃப் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
கமல் ஹாசன் கடைசியாக விக்ரம் படத்தில் நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்தப் படத்தின் மூலம் தரமான வெற்றியை பதிவு செய்தார். அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதன்படி இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் படம் ஆகியவை தற்போது கமலின் லைன் அப்பாக இருக்கிறது. இடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்க கமிட்டானார். ஆனால் அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டது. அதற்கு பதிலாக சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

கமல் - மணிரத்னம்: கமல் ஹாசனும் மணிரத்னமும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் இன்றுவரை சிறந்த அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ஷூட்டிங் அப்டேட்: இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர். ஏற்கனவே மன்மதன் அன்பு, தூங்கா வனம் ஆகிய படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் திரிஷா. இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக கமலுடன் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி செர்பியாவில் விறுவிறுப்பாக நடந்தது. இதனையடுத்து மக்களவைத் தேர்தல் நடந்ததால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்தது.
விலகிய நடிகர்கள் மீண்டும் இணைந்தார்கள்: இதற்கிடையே படத்தில் கமிட்டாகியிருந்த துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டோர் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக சில வாரங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. அதேசமயம் சிம்பு இந்தப் படத்தில் கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்பட்டது. நிலைமை இப்படி இருக்க துல்கர் சல்மானும், ஜெயம் ரவியும் மீண்டும் இணைந்திருப்பதாக இப்போது சொல்லப்படுகிறது.
ஆடிப்போன மணிரத்னம்: இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிந்ததை அடுத்து தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் மீண்டும் செர்பியாவில் தொடங்கியிருக்கிறது. அதில் சிம்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததாக ஒரு சம்பவம் கூறப்படுகிறது. அதாவது செர்பியாவில் மாலை 4 மணிக்கு சூரிய ஒளி மங்க தொடங்கிவிடும் என்பதால் அதற்குள் ஷூட்டிங்கை முடிக்க மணிரத்னம் திட்டமிட்டிருக்கிறாராம்.
அதன் காரணமாக மணிரத்னம் சொன்ன நேரத்திற்கெல்லாம் சிம்பு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிடுகிறாராம். அதுமட்டுமின்றி ஒரு நீளமான காட்சியை சிம்பு ஒரே டேக்கில் நடித்து முடித்தாராம். அதனைப் பார்த்த மணிரத்னம் இப்படி ஒரு நடிகரா என்று ஆடிப்போய்விட்டதாகவும்; சிம்புவை ரொம்பவே பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











