twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிஜிட்டலுக்கு மாறும் மணிரத்னத்தின் கிளாசிக் ஹிட் படங்கள்

    |

    சென்னை : கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து டைரக்டர் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் மணிரத்னத்தின் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, அவர் இயக்கிய கிளாசிக் ஹிட் படங்கள் பலவும் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன. மணிரத்னம் இயக்கிய தளபதி, ரோஜா, பாம்பே உள்ளிட்ட 26 படங்கள் 8000 ரெசொல்யூஷன் கொண்டதாக டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்பட உள்ளன.

     Mani Ratnams classic movies getting digitized

    விரைவில் இந்த படங்களை ஓடிடி தளத்திலும் காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களை டிஜிட்டலுக்கு மாற்றும் பணியை ஃபிலிம் ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் மற்றும் பிரசாத் ஸ்டூடியோஸ் ஆகியன செய்து வருகின்றன.

    அதே சமயம், மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தின் சூட்டிங்கும் நடந்து வருகிறது. இரப்பினும் கொரோனா பரவல் சூழல் காரணமாக மந்த கதியிலேயே இந்த படத்தின் பணிகள் நடந்து வருகிறது.

    இந்திய திரையுலகைச் சேர்ந்த டாப் நடிகர்களான விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சோபிதா துலிபலா, ஜெயராம், பிரபு, அஸ்வின் ககுமமா உள்ளிட்ட பலர் நடிக்கிறார். லைகா புரொடஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இந்த பிரம்மாண்ட படத்தை தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

    English summary
    Maniratnam's classic films are being digitized to 8K resolution.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X