இந்தியா - பாக் பிரிவினையை வைத்து இந்திப் படம் இயக்கும் மணிரத்னம்!

இந்த முறை மீண்டும் தனது பேவரிட் கதைக் களத்தில் குதித்துள்ளார். அது இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை.
இந்த படத்தின் கதை நாடு பிரிவினை அடைந்த சமயத்தில் நிகழும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாம். மணிரத்னம் இயக்க உள்ள இந்திப் படத்திற்கு ரென்சில் டிசில்வா திரைக்கதை எழுதுகிறாராம்.
இவர் குர்பான் படத்தை இயக்கியுள்ளார். 18 ஆண்டு கால விளம்பரப் பட இயக்குநர் என்ற பெரிய அந்தஸ்து கொண்ட டிசில்வா, ஏற்கனவே அக்ஸ், ரங் தே பசந்தி, ராவணன் ஆகிய படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.
அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நடித்த ராவணன் சரியாக போகாவிட்டாலும் மணிரத்னத்துடன் மீண்டும் இணைகிறார் டிசில்வா. இந்தப் படத்தில் இளைய தலைமுறை நடிகர்களை நடிக்க வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments


Click it and Unblock the Notifications