பொன்னியின் செல்வன்‘சோழா சோழா‘பாடல் எப்படி எடுத்தாங்க தெரியுமா?மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'சோழா சோழா' பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Recommended Video

PS-1 அடுத்த Song Ready | சினிமா செய்திகள் அப்டேட்.. | Live | Filmibeat Tamil

பொன்னியின் செல்வன்'நாவலை படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வனின் முன்னணி கதாபாத்திரங்களாக ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன் என்கிற பொன்னியின் செல்வன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, சுந்தர சோழர், ஆழ்வார்க்கடியான் நம்பி, பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், பூங்குழலி, மதுராந்தகன், பார்த்திபேந்திர பல்லவன், கொடும்பாளூர் வேளாளர் பூதி விக்ரம கேசரி கதாபாத்திரங்கள் உள்ளன.

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

தோட்டாதரணி கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முன்னதாக பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து முதல் பாடலாக வெளிவந்த பொன்னி நதி பாடல் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதையடுத்து இரண்டாவது சோழ சோழ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

சோழா சோழா

சோழா சோழா

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள, சோழா சோழா பாடல் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் போரில் வென்ற பிறகு குந்தவை ஐஸ்வர்யாராயை நினைத்து பாடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. நடன இயக்குநர் பிருந்தா இந்தப் பாடலுக்கு பிரபல நடன வடிவமைப்பு செய்துள்ளார். ஏராளமான நடனக்கலைஞர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக இந்த பாடல் உருவாகி உள்ளது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இளங்கோ கிருஷ்ணன் எழுதிய இப்பாடலை , வி.எம்.மஹாலிங்கம் மற்றும் நகுல் அப்யங்கர் உள்ளிட்டோர் பாடி உள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் இந்த பாடல் வெளியானது. இன்று காலை வெளியான மேக்கிங் வீடியோவை யூடியூபில் ஏராளமான பார்வையாளர்கள் கடந்து டிராண்டிங்கில் உள்ளது. செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தயாராக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X