Don't Miss!
- News
"சலங்கை ஒலி" இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்.. சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஹாலிவுட் மலைக்கு மேலே பறந்த சோழர்களின் கொடி.. அடிச்சு தூள் கிளப்பும் பொன்னியின் செல்வன் டீம்
அமெரிக்கா: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பொன்னியின் செல்வன் வெளியாகவுள்ளதை முன்னிட்டு படக்குழுவினர் பல்வேறு நகரங்களில் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை ஹாலிவுட் வரை கொண்டு சென்றுள்ளது தயாரிப்பு நிறுவனம்.
சீரியசாக
அபத்த
கேள்வி
கேட்ட
செய்தியாளர்..’நான்
மணிரத்னம்
என்பதால்
சாத்தியம்’
குழப்பிய
கவுதம்
மேனன்

பரபரக்கும் பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன்ஸ்
லைகா புரொடக்ஷன், மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து தயாரித்துள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. மணிரத்னம் மிகப் பிரம்மாண்டமாக இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு என பெரிய நட்சத்திரப் பாட்டாளமே இணைந்து நடித்துள்ளது. இதனால், ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனிடையே பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் படுவேகமாக நடைபெற்று வருகின்றன.

பொன்னியின் செல்வன் புக்கிங் தொடங்கியது
பொன்னியின் செல்வன் தமிழில் உருவாகி இருந்தாலும், பான் இந்தியா படமாக தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகிறது. இதனையடுத்து பொன்னியின் செல்வன் படக்குழு கொச்சி, பெங்களூரு, ஐதராபாத், மும்பை என ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக பறந்துகொண்டே இருக்கின்றனர். இந்நிலையில், 30ம் தேதி வெளியாகும் பொன்னியின் செல்வன் படத்திற்கான டிக்கெட் புக்கிங்கும் இன்று தொடங்கியது. இதனால், ரசிகர்களும் வேகவேகமாக டிக்கெட் ரிசர்வேஷன் செய்து வருகின்றனர்.

ஹாலிவுட் வரை சென்ற சோழர்கள் வரலாறு
பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தியின் வந்தியத்தேவன் போஸ்டர் லாஸ் வேகாஸில் வெளியாகி மாஸ் காட்டியது. லாஸ்வேகாசில் வந்தியத்தேவன் என கார்த்தியின் போஸ்டர் தமிழ் டாக்கீஸ் தனது டிவிட்டரில் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்தது. அதேபோல், லாஸ்வேகாஸில் உள்ள டிஜிட்டல் பில் போர்டுகளிலும் பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் ஹாலிவுட்டில் பொன்னியின் செல்வனுக்கு ப்ரோமோஷன் செய்து அசர வைத்துள்ளது படக்குழு. ஹாலிவுட் மலைக்கு மேலே சோழர்களின் கொடியை பறக்கவிட்டு மாஸ் காட்டியுள்ளது. இப்போது அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.

இரண்டாம் பாகத்திற்கும் இப்போதே எதிர்பார்ப்பு
பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், முதல் பாகம் 30ம் தேதி வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முதல் பாகமே இன்னும் வெளியாகாத நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழுவினர் மேற்கொண்டுள்ள ப்ரோமோஷன் பணிகள், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளன. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2ம் பாகம், அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.