Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
கமல், ரஜினியை பின்தொடர்ந்த பொன்னியின் செல்வன்.. எதுலன்னு தெரியுமா?
சென்னை : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்டவர்களின் சிறப்பான நடிப்பில் வெளியாகியுள்ளது பொன்னியின் செல்வன்.
இந்தப் படம் சோழர்களின் வாழ்வியலை மையமாக வைத்து வெளியான பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு வெளியானது.
கேரக்டர் தேர்வு உள்ளிட்டவற்றில் இந்தப் படத்தில் சிறப்பாக செயல்புரிந்துள்ளார் மணிரத்னம். அவரது நீண்டகால கனவு இந்தப் படத்தில் வெளிப்பட்டுள்ளது.
ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன வந்தியத்தேவன் கார்த்தி.. அந்த பிரச்சனை கிளப்பிய நெட்டிசன்கள்!

பொன்னியின் செல்வன் படம்
நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்டவர்களின் சிறப்பான நடிப்பை மூலதனமாக கொண்டு பொன்னியின் செல்வன் என்ற தனது கனவுப் படத்தை திரைவடிவமாக்கியுள்ளார் மணிரத்னம். அவரின் திட்டமிடல் இந்தப் படத்தில் வெளிப்பட்டுள்ளது. 150 நாட்களிலேயே படத்தை முடித்துள்ளார்.

மிரண்ட பாகுபலி இயக்குநர்
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் எடுத்து முடிக்க இயக்குநர் ராஜமௌலிக்கு 5 ஆண்டுகள் ஆன நிலையில், வெறுமனே பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும் 150 நாட்களில் முடித்துள்ள மணிரத்னத்தின் திட்டமிடல், ராஜமௌலியையே மலைக்க செய்துள்ளது. இதுகுறித்து நடிகர் ஜெயம் ரவி பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியிருந்தார்.

ரூ.300 கோடி வசூல்
இந்தப் படம் தற்போது 6 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், கடந்த 6 நாட்களில் படம் 300 கோடிக்கும் அதிகமான வசூலை சர்வதேச பாக்ஸ் ஆபீசில் தாண்டியுள்ளது. தொடர்ந்து அரங்குக் கொள்ளாத காட்சிகளாக படம் திரையரங்குகளில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

கமல், ரஜினியை தொடர்ந்து
முன்னதாக கோலிவுட்டில் 300 கோடி ரூபாய் கிளப்பில் ரஜினியின் 2.ஓ, விஜய்யின் பிகில், மற்றும் கமலின் விக்ரம் போன்ற படங்கள் இணைந்திருந்த நிலையில் தற்போது அந்தப் பட்டியலில் பொன்னியின் செல்வன் இணைந்துள்ளது. இது வரலாற்றுப் படங்களை எடுக்கவிரும்பும் இயக்குநர்களுக்கான நல்ல துவக்கமாக அமைந்துள்ளது.
இந்தப் படம் தொடர்ந்து அனைத்து தரப்பினரையும் திரையரங்குகளுக்கு இழுத்துள்ளது. தங்களது இளம் வயதில் பொன்னியின் செல்வன் நாவலை வாசித்தவர்கள்கூட இந்தப் படத்தை திரையில் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வாறு மூத்த தலைமுறையினர் இந்தப் படத்தை பார்த்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.