twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் நாட்டில் மட்டும் ரூ.200 கோடி வசூல்.. முதல் படமாக சாதித்த பொன்னியின் செல்வன்!

    |

    சென்னை : மணிரத்னத்தின் கனவுக்கு உயிர் கொடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம்.

    இந்தப் படத்தின் சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்ஸ் 450 கோடிகளை தாண்டியுள்ளது.

    இதனிடையே தமிழகத்திலும் பொன்னியின் செல்வன் படம் மிகச்சிறந்த வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது.

    மணிரத்னத்தின் நீண்டகால கனவு

    மணிரத்னத்தின் நீண்ட கால கனவுக்கு உயிர் கொடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கு சிறப்பான திரைக்கதையையும் காட்சி அமைப்புகளை கொடுத்து அவரது படைப்பிற்கு சிறப்பை சேர்த்துள்ளார் மணிரத்னம்.

    பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆஃபிஸ்: வெறித்தனமான வசூல் வேட்டையில் மணிரத்னத்தின் சோழர் படை! பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆஃபிஸ்: வெறித்தனமான வசூல் வேட்டையில் மணிரத்னத்தின் சோழர் படை!

    மணிரத்னத்தின் நீண்டகால கனவு

    மணிரத்னத்தின் நீண்டகால கனவு

    மணிரத்னத்தின் நீண்ட கால கனவுக்கு உயிர் கொடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கு சிறப்பான திரைக்கதையையும் காட்சி அமைப்புகளை கொடுத்து அவரது படைப்பிற்கு சிறப்பை சேர்த்துள்ளார் மணிரத்னம்.

    மணிரத்னத்திற்கு சாத்தியப்பட்ட முயற்சி

    மணிரத்னத்திற்கு சாத்தியப்பட்ட முயற்சி

    இந்தக்கதையை திரையில் கொண்டுவர முன்னதாக எம்ஜிஆர், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களும் மெனக்கெட்ட நிலையில், மணிரத்னத்திற்கே இந்த முயற்சி சாத்தியப்பட்டுள்ளது. அவருக்கு உடனடியாக இல்லாமல் மூன்றாவது முயற்சியிலேயே இந்தப் படம் சாத்தியப்பட்டுள்ளது.

    சிறப்பான கேரக்டர் தேர்வு

    சிறப்பான கேரக்டர் தேர்வு

    இந்தப் படத்தின் சிறப்பான விஷயமாக கேரக்டர்கள் தேர்வே பார்க்கப்படுகிறது. சோழர்களை பார்க்க முடியாத தலைமுறைகளுக்கு அவர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் இப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள் என்ற கற்பனையை இந்த கேரக்டர்கள் கொடுத்துள்ளன. முன்னணி நடிகர்களாக இருந்தாலும் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் உள்ளிட்டவர்கள் இந்தக் கேரக்டர்களுக்காக மிகுதியாக மெனக்கெட்டுள்ளது தெரிகிறது.

    சிறப்பான தொழில்நுட்ப கலைஞர்கள்

    சிறப்பான தொழில்நுட்ப கலைஞர்கள்

    படத்தில் நடிகர்கள் மட்டுமில்லாமல் தொழில்நுட்ப கலைஞர்களும் மிகுதியான உழைப்பை போட்டுள்ளனர். இசை, நடனம், கலை, பிரம்மாண்ட அரங்கங்கள் என படத்தின் ஒவ்வொரு விஷயமும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தப் படத்தின் இசைக்காக ஏஆர் ரஹ்மான் மிகுதியாக உழைத்துள்ளது படத்தின் பாடல்களில் வெளிப்பட்டுள்ளது.

    கதைக்கு உயிர்கொடுத்த இசை

    கதைக்கு உயிர்கொடுத்த இசை

    கதைக்கு அடுத்ததாக பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது. சமீபத்தில் படத்தின் பாடல்களின் மேக்கிங்கும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவரும் இந்தப் படத்தின் சிறப்பிற்காக எவ்வாறெல்லாம் பணிபுரிந்துள்ளனர் என்பதை ரசிகர்கள் உணர்ந்துக் கொள்ள முடிகிறது.

    சிறப்பான பிரமோஷன்

    சிறப்பான பிரமோஷன்

    இந்த அளவிற்கு உழைப்பை போட்டதுடன், படத்தின் பிரமோஷனிலும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் மிகுதியாக கவனம் செலுத்தினர். இவை அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்திற்குமிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. சர்வதேச அளவில் இந்தப் படத்தின் வசூல் 450 கோடிகளை கடந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமே 200 கோடிகளை இந்தப் படம் வசூலித்துள்ளது.

    தமிழகத்தின் முதல் ரூ200 கோடி வசூல் படம்

    தமிழகத்தின் முதல் ரூ200 கோடி வசூல் படம்

    முன்னதாக வெளியான பாகுபலி 2 படம் 150 கோடி ரூபாயையும் எந்திரன் 100 கோடி ரூபாயையும் சிவாஜி 50 கோடி ரூபாயையும் தமிழகத்தில் வசூலித்திருந்த நிலையில், தற்போது இந்தப் படங்களை ஓரங்கட்டிவிட்டு பொன்னியின் செல்வன் படம் முதலிடத்தை தமிழக வசூலில் பெற்றுள்ளது.

    English summary
    Director mani ratnam's Ponniyin selvan movie joins Rs 200 crs club and the first movie to do so
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X